பக்கம் எண் :

237

அடக்கும் வலிமை மிக்கிராத அழகினை உடைய கலனணிந்திருக்கும் மகளிரை, சிறையான் அகப்படுத்தல் ஆகா - காவலால் தீய செயலினின்றும் நீக்கி அகப்படுத்தல் முடியாது, அறையோ - முடியுமென்பா ருளராயின் அவரைஅறைகூவி அழைக்கின்றேன்.

(க-து.) மகளிர்க்குச் சிறைகாப்பினும்நிறைகாப்பே சிறந்ததாம்.

(வி-ம்.) நிறை என்றது மன அடக்கத்தை; அஃதாவது, காப்பன காத்துக் கடிவன கடிதல். மன அடக்கம் கூறவே, ஏனைய சொல்லவேண்டா வாயிற்று. சிறை யுளதாயவழி நிறையில்லையாயின், அச் சிறையாற் பயனில்லையாதலின், நிறைகாப்பே சிறந்ததாம். என்றும் என்றது ஓகார அசைபெற்று நின்றது.

'சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை' என்பது திருக்குறள்.

'நாய்வால் திருந்துதல் என்றுமோ இல்' என்பது பழமொழி.

(10)

337. நல்கூர்ந் தவர்க்குநனிபெரிய ராயினார்
செல்விருந் தாகிச் செலவேண்டா - ஒல்வ
திறந்தவர் செய்யும் வருத்தம் குருவி
குறங்கறுப்பச் சோருங் குடர்.

(சொ-ள்.) நனி பெரியர் ஆயினார் - செல்வத்தால் மிகவும் பெரியவர் ஆயினார், நல்கூர்ந்தவர்க்கு - வறுமையுடையார்க்கு, செல் விருந்தாகி செலவேண்டா - அவரிடத்துச் செல்கின்ற விருந்தாகச் செல்லவேண்டா; ஒல்வது இறந்து அவர் செய்யும் வருத்தம் - தம்மா லியலுமாற்றைக் கடந்து விருந்து செய்தலான் வரும் வருத்தம், குருவி குறங்கு அறுப்ப குடர் சோரும் - குருவி தொடையை அறுத்த அளவில் குடர்சோர்ந்து விழுந்துன்பத்தையொக்கும்.

(க-து.) செல்வமுடையார் வறியோரிடத்து விருந்தாகச் செல்லவேண்டா என்றது இது.

(வி-ம்.) 'ஒல்வது இறந்து' என்றது செல்வ முடையார் தகுதியறிந்து அதற்கேற்பத் தந் தகுதிக்கு மீறி ஒழுகுவர் என்பதாம். அங்ஙனம் அவர் விருந்து செய்தலான் வரும் வருத்தம் குடர் சோருந் துன்பத்தை யொக்கும்என்பதாம்.

'குருவி குறங்கறுப்பச் சோருங் குடர்' என்பது பழமொழி.

(11)