பக்கம் எண் :

246

இல்லாதவராகக் கொண்டு தெளிய அறியினும், தேர்ந்து - ஆராய்ந்து, அவர்க்கு செல்லாமை காணாக்கால் - விட்டு நீங்குதலில்லா வறுமையை நீக்க அறியானாயின், செல்லும் வாய் என் உண்டாம் - அவனுக்குச் செல்லும் நெறி வேறு யாதுளது? எல்லாம் பொய் - (உணவு அளித்தலை நோக்க, ஏனைய எல்லா அறங்களும் பொய்), அட்டு ஊணே வாய் - சமைத்துச் செய்த உணவை இடுமறமேமெய்யாமாதலின்.

(க-து.) எல்லா அறங்களுள்ளும் உணவளித்தலேசிறந்த அறமாகக் கருதப்படும்.

(வி-ம்.) தீர்தல் - பற்றுவிடுதல்; தீர்ந்தால், தொடர்பு இல்லாதவர்கள். தீர்ந்தாராகக் கொண்டு தெளியினும் என்றமையானே, தீராதவர் செல்லல் காணவேண்டும் என்பது பெறப்படும். வறுமையைச் 'செல்லாமை' என்றார். தரித்திராத நிலைமையதாயினும், நிற்கும் ஒரு கணத்துள்ளேயே அது செய்யும் கொடுமை நோக்கி. 'என்னுண்டாம்' என்றது, வறியார்க்கு உணவளித்தலே சிறந்தது என வினாவகையால் யாப்பறுத்தவாறாம். பொய்யென்றும் 'வாய்' என்றும் கூறியது, ஒன்றனை ஒன்று நோக்கியேயாம். வாய் ஈண்டு உறுப்பை உணர்த்தாது அதனது காரியத்திற் காயிற்று. வாய்மையைப் பேசுவதற்கே வாய் என்பது பெயராம். பொய்ம்மையைப் பேசும் உறுப்பைத் 'தோல்'என்பார் ஆசிரியர்கள்.

'எல்லாம் பொய் அட்டூணே வாய்' என்பது பழமொழி.

(2)

350. அல்லல் ஒருவர்க் கடைந்தக்கால் மற்றவர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல
வினைமரபின் மற்றதனை நீக்கும் அதுவே
மனைமர மாய மருந்து.

(சொ-ள்.) ஒருவர்க்கு அல்லல் அடைந்தக்கால் - ஒருவர்க்குத் துன்பம் வந்தமையுமானால், அவர்க்கு நல்ல கிளைகள் எனப்படுவார் - அவருக்கு நெருங்கிய உறவினர் என்று சொல்லப்படுபவர்கள், நல்ல வினை மரபின் அதனை நீக்கும் - நல்ல செயல் முறையான் அத் துன்பத்தை நீக்க முற்படுக, அது - அச்செயல், மனைமரம் ஆய மருந்து -இல்லின்கண் உள்ள மரமாகிய மருந்தினையொக்கும்அல்லலுற்றார்க்கு.

(க-து.) அல்லலுற்ற காலத்து அவ்வல்லலை நீக்குபவரே சுற்றத்தார் எனப்படுவார்.