பக்கம் எண் :

250

(சொ-ள்.) பொரு கடல் தண் சேர்ப்ப - கரையொடு மாறு கொள்ளும் கடலையுடைய குளிர்ந்த நெய்தல் நாட!, பூ தாமரை மேல் - அழகிய தாமரையிடத்து வாழும், திருவொடும் துச்சு இன்னாது - இலக்குமியேயாயினும் நெடுநாள் உடனுறைதல் துன்பந் தருவதாம்; (அதுபோல), கருவின் உட்கொண்டு கலந்தாரும் - கருவினுள் தங்கியபொழுதே தொடங்கிக் கலந்தவர்களும், தம்முள் ஒருவழி நீடும் உறைதல் துன்பம் - தமக்குள்ளே ஓர் இடத்தில் நீண்டநாளும் ஒருங்கே தங்கியிருந்து வாழுதல் துன்பம் தருவதாம்.

(க-து.) உடன்பிறந்தாராயினும் ஒரே இடத்தில் நீண்ட நாள்தங்கியிருத்தல் ஆகாது.

(வி-ம்.) கருவினுட் கொண்டார் என்றது உடன்பிறந்தாரை. இலக்குமியோடு சேர்ந்து வாழினும், இடர் பற்றியும், கால நெடுமைபற்றியும், தம்முள் மனத்தாங்கல் ஏற்பட்டு அன்பிற்கு அழிவு உண்டாம். ஆதலால், உடன்பிறந்தார் தம்முள் ஒருங்கே இருந்து உடன்வாழ்தல் அன்பு அழிதற் கேதுவாம். இடத்தாலும், காலத்தாலும் சேட்பட நிற்றல் அன்பு முதலியவற்றிற்கு ஆக்கந்தருவதாம். அங்ஙனமின்றி நிற்றல் அவை அழிவுக்கு ஏதுவாம். இன்னாதுதுன்பம் என்பன அவர்கொண்ட அன்பின் அழிவை உணர்த்திநின்றன.

'திருவொடும் இன்னாது துச்சு' என்பது பழமொழி.

(8)

356. பாரதத் துள்ளும்பணையம்தம் தாயமா
ஈரைம் பதின்மரும் போரெதிர்ந் தைவரோ(டு)
ஏதில ராகி இடைவிண்டார் ஆதலால்
காதலோ டாடார் கவறு.

(சொ-ள்.) பாரதத்துள்ளும் - பாரதநூலுள்ளும், பணையம் தம் தாயமா(க) - பந்தயப் பொருள் தம்முடைய தாயப்பொருளாகக் கொண்டு, இரு ஐம்பதின்மரும் - நூற்றுவரும், ஐவரோடு போர் எதிர்ந்து - ஐவரோடும் சூதுப்போர் செய்து, ஏதிலராகி இடை விண்டார் ஆதலால் - (அது காரணமாகப்) பகைவராகி இடைக்காலத்திலேயே தம்முயிரை நீக்கிக்கொண்டார்களென்றும் கேட்கப்படுதலால், காதலோடு கவறு ஆடார் -அன்புடையவரோடு விளையாட்டாகவாயினும் சூதாடுதலிலர்அறிவுடையார்.

(க-து.) சூதாடல் உயிர்க்கிறுதியைத் தருவதாம்.