364. அறஞ்செய் பவர்க்கும் அறவுழி நோக்கித் திறந்தெரிந்து செய்தக்கால் செல்வுழி நன்றாம் புறஞ்செய்யச் செல்வம் பெருகும் அறஞ்செய்ய அல்லவை நீங்கி விடும். (சொ-ள்.) புறம் செய்ய செல்வம் பெருகும் -செல்வத்திற்கு வேண்டும் புறச் செயல்களைச் செய்யஅதனால் செல்வம் வளரும், அறம் செய்ய அல்லவை நீங்கிவிடும் -அறங்களைச் செய்ய அதனால் பாவங்கள் பற்றுதலைவிட்டுஒழியும், (ஆதலால்), அறம் செய்பவர்க்கும் - அறங்களைச்செய்கின்றவர்களுக்கும், அறவுழி நோக்கி - அறஞ்செய்யுமிடத்தை ஆராய்ந்து, திறம் தெரிந்து - செய்யும்கூறுபாட்டை அறிந்து, செய்தக்கால் - செய்தால், செல்வுழிநன்றாம் - செல்லுகின்ற மறுமையுலகின்க ணின்பமுண்டாகும். (க-து.) அறஞ்செய்வார் இடனும் செய்யும்கூறுபாடும் அறிந்து செய்க. (வி-ம்.) அறவுழி நோக்கித் திறந்தெரிதலாவது, வறியோரை அறிந்து, அவர்க்கு வேண்டுவனவேண்டியாங் களித்தல். 'செய்தக்கால் நன்றாம்,' எனவே,இடனும் திறனும் அறிந்து செய்யாதவழி நிரயத் துன்பம்உண்டாம். அது மீன் பிடிப்பானுக்குத் தூண்டில் வாங்கக் காசுகொடுத்ததை யொக்கும். புறம்செய்தலாவது குறியெதிர்ப்பை நாடிக்கொடுத்தல். இடையூறு நீக்கிக் காவல் செய்தல்போல்வன. 'நீங்கி விடுத' லாவது தனக்குப் பகையாகியஅறம் வளர்தலானே தான் மெலிந்து நசித்துப் போதல். 'அல்லவை தேய அறம் பெருகும்' என்பதே இது. 'அறஞ் செய்ய அல்லவை நீங்கிவிடும்'என்பது பழமொழி. (8) 365. தோற்றம் அரிதாயமக்கட் பிறப்பினால் ஆற்றும் துணையும் அறஞ்செய்க மாற்றின்றி அஞ்சும் பிணிமூப் பருங்கூற் றுடனியைந்து துஞ்சு வருமே துயக்கு. (சொ-ள்.) துயக்கு - அறிவின் மயக்கம்,அஞ்சும் பிணி மூப்பு அரும் கூற்று உடன் இயைந்து - அஞ்சத் தகும் நோய்,மூப்பு, அருங்கூற்று என்ற இவைகளுடன் சேர்ந்து, மாற்று
|