பக்கம் எண் :

259

'கண்ணிமை நொடியன அவ்வே மாத்திரை' என்றா ராகலின். பொருளை எங்ஙனம் பாதுகாவல் செய்யினும் பிறரால் வவ்வப்படுத லுறுதி. ஆதலின், உடனேஅறஞ் செய்க என்றவாறு.

'காப்பாரிற் பார்ப்பார் மிகும்' என்பது பழமொழி.

(12)

369. இன்றி யமையாஇருமுது மக்களைப்
பொன்றினமை கண்டும் பொருள்பொருளாக் கொள்பவோ
ஒன்றும் வகையான் அறஞ்செய்க ஊர்ந்துருளின்
குன்று வழியடுப்ப தில்.

(சொ-ள்.) இன்றி அமையா இருமுது மக்களை - தம்மையின்றி உயிர் வாழாத இருவராகிய முதிய தாயும் தந்தையும், பொன்றினமை கண்டும் - தாந் தேடிய பொருளையும் தம்மையும் விட்டுவிட்டு இறந்தமையை அறிந்தும், பொருள் பொருளா(க) கொள்பவோ - செல்வத்தை ஒரு பொருளாக மனத்தில் கொள்வார்களோ?, ஒன்றும் வகையான் அறம் செய்க - பொருந்தும் நெறியான் அறத்தைச் செய்துய்க, குன்று ஊர்ந்து உருளின்வழி அடுப்பது இல் - மலை ஊர்ந்து உருண்டு செல்லுமாயின் அதனைவழி நின்று தடுப்பது ஒன்றுமில்லை யாதலின்.

(க-து.) செல்வத்திற்கே யன்றி உனக்கும் நிலையாமை உண்மையால் உடனேஅறம் செய்க.

(வி-ம்.) 'இன்றியமையா இருமுது மக்கள்' என்றமையானே, பற்றுடைய அவர்களையே விட்டுப் பிரிந்தன ரெனின், பொருள் விட்டு நாம் பிரிதல் உறுதி யென்பதறிந்து அதற்கேற்ப ஒழுகுக என்பது. 'பொன்றினமை கண்டும்' என்றமையானே, நாம் பொன்றுதலும் உறுதியாம் என்பது அறியப்படுதல் வேண்டும். ஆகவே, நிலையுறுதலின்மை யறிந்து அறஞ் செய்க.மலையைத் தடுத்தல் இல்லையாதல் போலச்சாக்காட்டைத் தடுத்தலும் பொருளுக்கில்லையாம்.

'ஊர்ந்துருளின் குன்று வழியடுப்ப தில்' என்பது பழமொழி.

(13)

370. அற்றாக நோக்கி அறத்திற் கருளுடைமை
முற்ற அறிந்தார் முதலறிந்தார் - தெற்ற
முதல்விட் டஃதொழிந்தார் ஓம்பா ஒழுக்கம்
முயல்விட்டுக் காக்கை தினல்.