காக்கை கரைவதை விருந்தினம் வருவதற்குஅறிகுறி என்று கொள்ளுவர். ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்பது திருக்குறள். (2) 36. தந்நடைநோக்கார் தமர்வந்த வா(று) அறியார் செந்நடை சேராச் சிறியார்போல் ஆகாது, நின்நடை யானே நடஅத்தா! நின்னடை நின்நின்று அறிகிற்பார் இல். (சொ-ள்.) அத்தா - அத்தனே!, நின் நடை நின் நின்று அறிகிற்பார் இல் - நினது ஒழுக்கத்தை உன்னிடத்தினின்றும் அறிதலுடையார் இல்லை, (நீயே அறிவாய் ஆகையால்) தம் நடை நோக்கார் தமர்வந்தவாறு அறியார் - தமது ஒழுக்கத்தை ஆராய்தலிலராய்த் தம் சுற்றத்தார் ஒழுகிவந்த வரலாற்றையும் அறிதலிலராய், செம்நடை சேராச் சிறியார் போலாகாது - செவ்விய நடையைச் சேராத அறிவிற் சிறியார் போல் ஒழுகாது, நின் நடையானே நட -நினக்கு விதிக்கப்பட்ட நின்குடிக்கேற்ற ஒழுக்கத்தின்படியேஒழுகக் கடவாயாக. (க-து.) ஒவ்வொருவரும் தத்தம்குடிக்கேற்ப ஒழுகுதல் வேண்டும். (வி-ம்.) பிறர் நினது ஒழுக்கத்தை அறிதல் அருமையின் உண்மையாகவே ஒழுகுக என்பார், 'நின்னடையானே நட' என்றார். செம்மையாகிய நடை செந்நடை எனப்பட்டது. அஃதாவது தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கினை உடையராதல், தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கினை நூன்முறையான் ஆராய்தலும், தம் உறவினர் எங்ஙனம் ஒழுகிவந்தார் என அவர் ஒழுக்கினை ஆராய்தலும் நன்னெறியில் நிற்றற் குரியவழிகளாம். 'நின்னடை நின்னின்று அறிகிற்பார் இல்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி. (3) 37. நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால் பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே கூர்த்தநுண் கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும் ஓர்த்தது இசைக்கும் பறை. (சொ-ள்.) பறை ஓர்த்தது இசைக்கும் - உடுக்கை நாம்நினைத்த ஓசையையே ஒலியாநிற்கும், (அதுபோல) கூர்த்த நுண்
|