பக்கம் எண் :

260

(சொ-ள்.)அறத்திற்கு அருள் உடைமை - அறத்தினுக்கு அருள் உடையரா யிருத்தல், அற்றாக நோக்கி - பண்பாதலை ஆராய்ந்து, முற்ற அறிந்தார் முதல் அறிந்தார் - அதன் திறனை முழுதும் அறிந்தார்கள் காரணம் அறிந்து அறம் செய்வாரெனப்படுவார், தெற்ற - தெளிவாக, முதல் விட்டு - காரணமாகிய அருளைவிட்டு, அஃது ஒழிந்தார் - திறந் தெரியாமையான் அவ்வறத்தையும் கைவிட்டாருடைய, ஓம்பா ஒழுக்கம் - பாதுகாவாத கொடை, முயல் விட்டு காக்கை தினல் - நிலத்தில் கண்ணோடும் முயலைவிட்டு, ஆகாயத்தின்கண் செல்லும் காக்கையைப் பின் தொடர்ந்து சென்று தின்ன முயலுதலை யொக்கும்.

(க-து.)அருளோடு கூடிய அறம் சிறந்தது என்றது இது.

(வி-ம்.) ஓம்பா ஒழுக்கமாவது தீயவர்களுக்குச் செய்யும்உதவி முயலை விட்டுக் காக்கைப் பின் செல்வார் அதனைப் பெறமுடியாதவாறு போல, இத்தீயவர்களுக்குக் கொடுக்கும் கொடையால் நன்மை யடைதலும் முடியாது.'அஃதும்' என்றதன் கண்ணுள்ள உம்மை தொக்கது.‘முயல் தசை' ‘காக்கையின் தசை' என்றல் பொருத்தமன் றென்க.

'இனைய தன்மையன் என்றறி வரியவன்
தனைமுன் விட்டுத் தாமற்று நினைப்போர்
மாமுயல் விட்டுக்
காக்கை பின்போங் கலவர் போலவும்'

என்ற இடத்தும் தசை குறிப்பிடப்படாமை அறியத்தக்கது.எளிதில் அடையக்கூடியதை விட்டு அரிது முயன்றும் அடையக் கூடாததற்கு ஆளப்படும் பழமொழி இது.

'முயல் விட்டுக் காக்கை தினல்' என்பது பழமொழி.

(14)

371. இம்மைத் தவமும் அறமும் எனவிரண்டும்
தம்மை யுடையார் அவற்றைச் சலமொழுகல்
இம்மைப் பழியேயு மன்றி மறுமையும்
தம்மைத்தாம் ஆர்க்குங் கயிறு.

(சொ-ள்.)தம்மை உடையார் - தம்மை 0வீட்டின்கண் செலுத்தும் விருப்பம் உடையார்,இம்மை தவமும் அறமும் என இரண்டும் - தாம் இப் பிறப்பின்கண்ணே செய்யும் தவமும் அறமும் ஆகிய இவ்விரண்டு நெறியின்கண்ணும், அவற்றை சலம் ஒழுகல் - அவற்றை வஞ்ச மனத்தராய்ச் செய்தல், இம்மை பழியே யன்றி - இம்மையின்கண் பழியைஉண்டாக்குதலேயல்லாமல்,