பக்கம் எண் :

266

மேலுள்ள பற்றால், அதன் நுட்பத்தை அறியார்கொல்லோ என்றலுமாம்.

'இறைத்தோறும் ஊறுங்கிணறு' என்பது பழமொழி.

(7)

379. இரவலர் தம்வரிசையென்பார் மடவார்
கரவலராய்க் கைவண்மை பூண்ட - புரவலர்
சீர்வரைய வாகுமாம் செய்கை சிறந்தனைத்தும்
நீர்வரைய வாநீர் மலர்.

(சொ-ள்.) இரவலர் தம் வரிசை என்பார் - இரப்போர் நிலைக்குத் தக்க அளவினதாகக் கொடுப்பதே கொடை என்று சொல்லுகின்றவர்கள், மடவார் - மூடர்களே யாவார்கள், நீர் மலர் நீர் வரைய ஆம் - நீர்ப்பூ நீரின் அளவினதாயிருக்கும், கரவலராய் கைவண்ணம் பூண்ட புரவலர் - கையிலுள்ளதை மறையாதவர்களாகிக் கைவண்மையையுடைய அரசர்கள், செய்கை இறந்த எனைத்தும்- செய்யும் கொடைச் செயலும் மற்றும் சிறந்த எல்லாச் சிறப்புக்களும், சீர் வரைய ஆகும் -தம் சீரினளவினதாயிருக்கும் ஆதலான்.

(க-து.) கொடுப்போன் தன்னிலை நோக்கி ஈக என்றது இது.

(வி-ம்.) நீரளவே யாகும் நீராம்பல்.அதுவன்றி அரசர்களுடைய கொடை முதலியன அவர் நிலைமையை நோக்கியதா யிருக்கின்றன.ஆதலால், கொடை கொடுப்போர் அளவினதே, யாம்.இரண்டும் உவமைகளாய் வலியுறுத்தி நின்றன.

'நீர்வரைய வாம்நீர் மலர்' என்பது பழமொழி.

(8)

380. தொடுத்த பெரும்புலவன் சொற்குறை தீர
அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான்
தொடுத்தின்ன ரென்னலோ வேண்டா கொடுப்பவர்
தாமறிவார் தஞ்சீ ரளவு.

(சொ-ள்.) தொடுத்த பெரும் புலவன் - செல்கெழுகுட்டுவனுடைய புகழைச் செய்யுளாகப் பாடிய பெரிய புலவனாகிய கௌதமன், அடுத்தர என்றாற்கு - துறக்கத்தை யானும் என் சுற்றமும் அடையுமாறு செய்வாயாக என்று சொல்ல அங்ஙனம் சொல்லிய அப் புலவற்கு,சொல் குறை தீர - அவர் சொல்லிய