பக்கம் எண் :

268

பொன்னையே சமைத்து உணவாக நல்கினாள்.ஆகையால் - இயன்றதொரு பொருளை ஈக என்றது.முன்றில் வீட்டிற்காயிற்று. ஒன்றும் என்ற இழிவு சிறப்பும்மை தொக்கது.

'ஒன்றுறா முன்றிலோ இல்' என்பது பழமொழி.

(10)

382. ஏற்றார்கட் கெல்லாம் இசைநிற்பத் தாமுடைய
மாற்றார் கொடுத்திருப்ப வள்ளன்மை - மாற்றாரை
மண்ணகற்றிக் கொள்கிற்கும் ஆற்றலார்க் கென்னரிதாம்
பெண்பெற்றான் அஞ்சான் இழவு.

(சொ-ள்.) ஏற்றர்கட்கு எல்லாம் - இரந்தவர்கள் எல்லோருக்கும், இசை நிற்ப - புகழ் இவ்வுலகில் நிலைத்து நிற்குமாறு, தாம் உடைய மாற்றார் கொடுத்திருப்ப வள்ளன்மை - தம்மிடத்துள்ள பொருளை இல்லையென்று கூறாராகித் தம் அளவிற்கு ஏற்பக் கொடுப்பது கொடையாம், மாற்றாரை மண் அகற்றி கொள்கிற்கும் ஆற்றலார்க்கு என் அரிது - பகைவரை வென்று நாட்டை அவரினின்றும் நீக்கித் தன்னதாகக் கொள்ளும் வலிமை உடைய அரசர்களுக்குச் செய்தற்கரியது யாது?, பெண் பெற்றான் இழவு அஞ்சான் - ஒரு பெண்ணைப் பெறத்தகும் காலத்தைப் பெற்றவன் இழக்கப்படும் பொருளுக்கு அஞ்சுவானல்லன் ஆதலால்,

(க-து.) கொடைக்குரியவர்கள் அரசர்களே யாவர்.

(வி-ம்.) மாற்றாரை வெல்லும் அரசர்களுக்கே கொடையினை ஆற்றும் வண்மை உண்டாம். அவர்கள் கொடையினைக் கைக்கொள்வராயின், பெண் பெற்றானிழவுக் கஞ்சாதவாறு போல அஞ்சுதலிலர்.முதலிரண்டடிகளும் கொடையினியலை விளக்கி நின்றன.

'பெண் பெற்றான் அஞ்சான் இழவு' என்பது பழமொழி.

(11)

383. பயனோக்கா தாற்றவும் பார்த்தறிவொன் றின்றி
இசைநோக்கி ஈகின்றா ரீகை - வயமாப்போல்
ஆலித்துப் பாயும் அலைகடல் தண் சேர்ப்ப!
கூலிக்குச் செய்துண்ணு மாறு.


(சொ-ள்.) வயமாபோல் ஆலித்து பாயும் அலைகடல் தண்சேர்ப்ப - வெற்றியையுடைய குதிரையைப்போல் ஒலித்துத் தாவிச் செல்லும் அலைகடலையுடைய குளிர்ந்த நீர் நாடனே!, பயன்