பக்கம் எண் :

274

கண் ஒழுகாதவர்களே, இருதலையும் கா கழித்தார் - காவின் இருபக்கத்திலுமுள்ள பொருளை நீக்கித் தண்டினைச் சுமந்து நின்றாரோ டொப்பர்.

(க-து.) இரு வாழ்க்கையினுள் ஒன்றன்கண்ணும் துணிவோ டொழுகாதவர்கள் இம்மை மறுமை இன்பங்களைப் பெறார்.

(வி-ம்.) 'துணியாதவரே' என்றது நூல்களின் கருத்தறியாது, இல் வாழ்க்கை பெரிதோ, துறவற வாழ்க்கை பெரிதோ என்றையங்கொண்டாராய் ஒரு நெறியிலும் துணிவில்லாது நிற்பவர்களைச் சுமந்து நின்ற ஒருவன் காவின் இருகடையுமுள்ள பொருளை ஒழித்து வெறுந் தண்டினைச் சுமந்துநிற்றல் போல, இல்வாழ்க்கையில் நில்லாமையால் இம்மைப் பயனையும், துறவற வாழ்க்கையில் நில்லாமையால் மறுமைப் பயனையும் இழந்து நிற்பராயிற்று.

'இருதலையும் காக்கழித்தார்' என்பது பழமொழி.

(4)

391. வளமையும் தேசும் வலியும் வனப்பும்
இளமையும் இற்பிறப்பும் எல்லாம் - உளவாய்
மதித்தஞ்சி மாறுமஃ தின்மையால் கூற்றம்
குதித்துய்த் தறிவாரோ இல்.

(சொ-ள்.) வளமையும் தேசும் வலியும் வனப்பும் - செல்வமும், புகழும், வலிமையும் அழகும்; இளமையும் இற்பிறப்பும் - இளமையும், குடிப்பிறப்பும்; எல்லாம் உளவாய் - என்றிவை யெல்லாம் உளவாக; மதித்து அஞ்சி மாறும் அஃதின்மையால் - அவற்றை மதித்துப் பயந்து நீங்குந்தன்மை கூற்றத்திற்கின்மையால், கூற்றம் குதித்து உய்ந்து அறிவாரோ இல் - இயமனினின்றும் பிழைத்துச் சென்றாராக அறியப்படுவார் ஒருவரும் இலர்.

(க-து.) வளமை, தேசு, முதலியவற்றின் நிலையாமை நோக்கித் துறந்து துறவறநெறியிற் சேர்க.

(வி-ம்.) தேசாவது ஒளி.உடையானைப் புகழ் விளக்கி நிற்றலின் புகழ் ஈண்டு ஒளியெனப்பட்டது.இவற்றின் மிகுதி கண்டு கூற்றம் அஞ்சுதலில்லை.ஆதலான், இவற்றது நிலையாமை நோக்கித் துறவறஞ் சேர்க.

'கூற்றம் குதித்துய்ந் தறிவாரோ இல்'என்பது பழமொழி.

(5)