(வி-ம்.) தோண்டப்பட்ட புழுதியையே கொட்டி மூடினும் அக்குழி மூடுதல் இல்லை.அதுபோல, தன்னால் ஈட்டப்பட்ட வினையின் விளைவை இயைந்து அடைதல் இல்லை. அஃது அறிவிலார் செய்கையாம். வினை என்றது சஞ்சித வினையை. பயன் என்றது சஞ்சித வினையின் பயனாய்ப் பிராரத்துவ வினையைக் கழிப்பதற்கு வந்த துன்பங்களாம். 'குழிப்பூழி ஆற்றா குழிக்கு' என்பது பழமொழி. (10) 397. திரியும் இடிஞ்சிலும் நெய்யுஞ்சார் வாக எரியும் சுடரே ரனைத்தாய்த் - தெரியுங்கால் சார்வற ஓடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல் நீரற நீர்ச்சார் வறும். (சொ-ள்.) சுடர் திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வு ஆக ஏர் எரியும் - விளக்கு திரியையும் அகலையும் நெய்யையும் பற்றுக் கோடாகக்கொண்டு அழகாக எரியும்; சார்வுகளின்றேல் எரியாது, அனைத்தாய் தெரியுங்கால் - அது போன்று ஆராயுமிடத்து, சார்வு அற - சார்வாக நின்ற மூவகை வினையும் அற்றுப்போக (அவ்வினையறுதலே), பிறப்பு அறுக்கும் - பிறவித் துன்பத்தை நீக்கும், அஃதே போல் நீர் அற நீர்சார்வு அறும் - அதைப் போலவே நீர் அற்றுப்போகவே அந்நீரிற் சார்ந்து வாழும்உயிர்களும் இறந்துபோகும். (க-து.) வினையறவே பிறப்பறும். (வி-ம்.) மூவகை வினையாவன சஞ்சிதவினை, பிராரத்துவவினை, ஆகாமிய வினை என்பன. ஆகாமிய வினை பற்றற்றான் பற்றினைப் பற்றியவழி யல்லது நீங்காமையின், அது நீங்குதற் பொருட்டு அவனடியைப் பற்றவேண்டும்; பற்றவே, மூவகை வினையற, அதனாற் பிறவி நீங்கும். 'நீரற நீர்ச்சார் வறும்' என்பது பழமொழி. (11) 398. ஒதநீர் வேலி உலகத்தார் அந்நெறி காதலர் என்ப தறிந்தலால் - யாதொன்றும் கானக நாட பயிலார் பயின்றது வானக மாகி விடும். (சொ-ள்.) கானக நாட - காடுகளையுடைய முல்லை நாடனே, பயின்றது வானகமாகிவிடும் - தீயதாயினும் பழகிய நெறி வானுலகத்தை யொப்ப இன்பம் பயந்து பின்னர்நீங்குதற்கு
|