(வி-ம்.) பயனொன்றுமின்றிப் பகையால் பல போலிச் சான்றுகளை ஆராய்ந்துகொண்டு துன்பம் செய்வார் என்பார், 'நினைத்துச் செய்யாமை' என்றார். 'தனக்கின்னா இன்னா பிறர்க்கு' -இஃது இச் செய்யுளில் வந்த பழமொழி. 'தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ, மன்னுயிர்க் கின்னா செயல்' என்ற திருக்குறள் கருத்தும் இங்கே நினைத்தற்குரியது. (2) 45. ஆற்றா ரிவரென்றடைந்த தமரையும் தோற்றத்தா மெள்ளி நலியற்க - போற்றான் கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கவ்வி விடும். (சொ-ள்.) போற்றான் கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் - காப்பாற்றாதவனாகி வாயிலை அடைத்து வைத்து அடித்தவிடத்து, நாயும் உடையானைக் கவ்விவிடும் - நாயும் தன்னை உடையானைக் கவ்வித் துன்புறுத்தும். (ஆகையால்), அடைந்த தமரையும் - தம்மையடைந்த சுற்றத்தார்களையும், ஆற்றார் இவர் என்று - நம்மை எதிர்க்க வலியிலர் என்று நினைத்து, தோற்றத்தாம் எள்ளி நலியற்க - பிறருக்கு வெளிப்படுமாறு தாம் ஒருவரையும் இகழ்ந்து துன்புறுத்தா தொழிக. (க-து.) நம்மையடைந்த சுற்றத்தார்களைஇகழ்ந்து நலியாதிருத்தல் வேண்டும். (வி-ம்.) அடைந்த உறவினர் எளியராயினும், நாய்கதுவினாற்போலத் தம்மால் இயன்ற சிறு தீங்கினையாவதுஇயற்ற முற்படுவர். 'போற்றான் கடையடைத்துப் புடைத்தக்கால் நாயும்உடையானைக் கவ்வி விடும்.' இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி. (3) 46. நெடியாது காண்கிலாய் தீயெளியை; நெஞ்சே! கொடியது கூறினாய் மன்ற - அடியுளே முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் கண்டு விடும். (சொ-ள்.) நெஞ்சே கொடியது கூறினாய் - நெஞ்சே! தீய செயல்களைப் பிறர்க்குச் செய்யுமாறு கூறினாய். (ஆதலால்) நீயெளியை -
|