பக்கம் எண் :

35

(சொ-ள்.) நாய் கதம்பட்டு கவ்வின் - நாய் சினந்து கவ்விய இடத்து, பார்த்து ஓடி சென்று - ஆராய்ந்து ஓடிப் பின்சென்று, பேர்த்து நாய் கவ்வினார் இல் - மீண்டும் நாயினைக் கவ்வித் துன்புறுத்தினவர்கள் ஒருவரும் இலர், நீர் தகவு இல்லார் நிரம்பாமை தம் நலியின் - நல்ல நேர்மையான குணங்களில்லாதவர்கள் அறிவு நிரம்பாமையால் தம்மைத் துன்புறுத்துவராயின், கூர்த்து - மன ஊக்கங்கொண்டு, அவரை தாம் நலிதல் சான்றவர்க்கு கோள் அன்று - அவர்களைத் தாம்துன்புறுத்துதல் அறிவு சான்றவர்க்குக் கொள்கையன்று.

(க-து.) அறிவிலார் தீங்கு செய்தாராயின் அதைப் பொருட்படுத்திப் பெரியோர்தீங்கு செய்யமாட்டார்கள்.

(வி-ம்.) சான்றவர் கோளாவது : தமக்கு இன்னா செய்தார்க்கும் அவர் நாண இனிமைதரும்செயலைச் செய்தலேயாகும்.

'இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு' என்பது திருக்குறள்.

அறியாமையால் தீங்கு செய்தலின்அறிவுடையார் பொருட்படுத்த வேண்டுவதில்லை.

'நாய் கவ்வின் பேர்த்தும் நாய்கவ்வினார் இல்' -இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(7)

50. காழார மார்ப! கசடறக் கைகாவாக்
கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர்
உள்ளத்துக் கொண்டுநேர்ந்(து)ஊக்கல் குறுநரிக்கு
நல்லநா ராயங் கொளல்.

(சொ-ள்.) காழ் ஆர மார்ப! - உரம்பெற்ற முத்துமாலையையணிந்த மார்பை உடையவனே!, கசடு அற கைகாவா கீழாயோர் - குற்றமற ஒழுக்கத்தைக் காவாத தாழ்ந்த குடியிற் பிறந்தவர்கள், செய்த பிழைப்பினை - இயல்பாகச் செய்த தீங்கினை, மேலாயோர் உள்ளத்துக்கொண்டு நேர்ந்து ஊக்கல் - உயர்ந்த குடியிற் பிறந்தவர்கள் மனத்துட்கொண்டு எதிர்த்துத் தீங்கு செய்ய முயலுதல், குறு நரிக்கு நல்ல நாராயம் கொளல் - சிறிய நரியைக் கொல்லும் பொருட்டுக்கூரிய நாராயணம் என்னும் அம்பினை யெய்யக் கொள்வதோடொக்கும்.

(க-து.) கீழோர் தவறு செய்தால் மேலோர் அதற்கு எதிராகத் தீங்கு செய்ய முயலார்.