பக்கம் எண் :

42

'ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்' என்பது இக்கருத்துப் பற்றி எழுந்த திருக்குறள்.

'தான் நோன்றிட வரும் சால்பு' என்பது பழமொழி.

(9)

8.பெரியாரைப்பிழையாமை

60. அறிவன்(று) அழகன்(று) அறிவதூஉம் அன்று
சிறியர் எனப்பாடும் செய்யும் : - எறிதிரை
சென்றுலாம் சேர்ப்ப! குழுவத்தார் மேயிருந்த
என்றூ(டு) அறுப்பினும் மன்று.

(சொ-ள்.) எறிதிரை சென்று உலாம் சேர்ப்ப - காற்றால் எறியப்படும் அலைகள் கரைமேல் சென்று உலாவுகின்ற கடல் நாடனே! என்று ஊடு அறுப்பினும் குழுவத்தார் மேயிருந்தமன்று - சூரியனை ஊடறுத்துச் செல்லினும் அறிஞர்கள் பொருந்தியிருந்த அவையை ஊடறுத்துப் போகலாகாது, (அங்ஙனம் போதல்) அறிவு அன்று - அறிவுடைமை யாகாது, அழகன்று - பிறந்த குடிக்கு அழகினைத் தாராது, அறிவது அன்று - அறிவதாகிய அறநெறியும் ஆகாது, சிறியர் எனப் பாடும் செய்யும் -கீழ்மக்கள் என்று சொல்லப்படுதலையும் செய்யும்.

(க-து.) அவையை ஊடறுத்துச் செல்லலாகாது.

(வி-ம்.) ஊடறுத்துப் போதல் ஆகாது என்பது இசையெச்சம். மன்றூடறுத்துச் சேறலின் தமது அறிவு, குடிப்பிறப்பு, அறம், பெருமை முதலியன இழிக்கப்படுதலின் சேறல் ஆகாது என்றார். 'என்றூடு அறுப்பினும் மன்றூடு அறுத்தல் இல்லை' என்பது பழமொழி.

(1)

61. ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று
தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல்
போமா(று) அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச்
சாமாகண் காணாத வாறு.

(சொ-ள்.) பெரியாரை ஆமாலோ என்று - பெரியோர்களை இவர்க்கு (எம்மோடு மாறுபடல்) ஆகுமோ என்று நினைத்து, சிறியார் தாமா முன் நின்று தறுகண்மை செய்து ஒழுகல் -