71. மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர் கூடம் மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல் பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர் ஈடில் லதற்கில்லை பாடு. (சொ-ள்.) மாடம் அழிந்தக்கால் - ‘வீடு அழிந்தவிடத்து' மரம் - அதிலுள்ள மரங்கள், மற்றும் எடுப்பதோர் கூடத்திற்குத் துப்பு ஆகும் - பின்னையும் கட்டுவதான வீட்டிற்குப் பயன்படும். அஃதேபோல் - அதுபோலவே, பெரியோர் பீடு இலாக்கண்ணும் - அறிஞர்கள் செல்வம் அழிந்த இடத்தும், பெருந்தகையர் -பெருந்தகைமையின்கண் வழுவார். (ஆகையால்),ஈடில்லதற்கு பாடு இல்லை - வலியில்லாததற்குப்பெருமையில்லை. (க-து.) தமது செல்வம் அழிந்தஇடத்தும் பெருந்தகைமையின் கணின்றும் வழுவார்பெரியோர். (வி-ம்.) மரத்திற்கு என்பதன்நான்கன் உருபைக் கூடம் என்பதனோடு கூட்டிக்கொள்க.பீடு - பெருமை. இதனைத் தருவது செல்வமாதலின் பீடுஅதற்குப் பெயராயிற்று. வறுமை சான்றோர்பெருந்தகைமையை நீட்டி யளப்பதொரு கோல்.பெரியோர் பெருந்தகைமையின்கணின்றும்வழுவுதற்குக் காரணம் ஒன்றுண்டாயின், அதுவறுமையாகத்தான் இருக்கவேண்டும். இதுபற்றியேதான்பீடிலாக்கண்ணும் என்று இறுதிநிலையாகவைத்துக் கூறப்பட்டது. மரங்கள், மாடம் அழிந்தஇடத்துவேறு ஒன்றற்குப் பயன்பட்டுத் தன் பெருமைகுறையாதவாறு போலப் பெரியோர் செல்வம் சிறுகியஇடத்தும் பெருந்தன்மையினின்றும் வழுவுதலிலர்.இங்ஙனமாயின், வலியில்லாததற்குப் பெருமை இல்லைஎன்பதாம். நற்குணங்கட்கெல்லாம் இடனாதல் பற்றிபெருந்தகையர் என்றார். ஈடில்லதற்குப் பாடில்லைஎன்பது பழமொழி. (3) 72. இணரோங்கி வந்தாரை என் உற்றக் கண்ணும் உணர்பவர் அஃதே உணர்ப - உணர்வார்க்(கு) அணிமலை நாட! அளறாடிக் கண்ணும் மணிமணி யாகி விடும். (சொ-ள்.) அணிமலை நாட - பத்தியாக இருக்கின்ற மலைகளையுடைய நாடனே!,உணர்வார்க்கு - இரத்தினத்தின் தன்மை அறியும் ஆற்றலுடையார்க்கு, மணி அளறு ஆடிக்கண்ணும்
|