இரத்தினம் சேற்றிலே கிடந்து மாசுண்ட இடத்தும், மணியாகிவிடும் - இரத்தினமாகவே தோன்றும். (அதுபோல) இணர் ஓங்கி வந்தாரை - கொத்துக்களைப்போன்று சூழலுடையராய் உயர்ந்த குடியின்கண் விளக்கமுற்று வந்தவர்களை, என் உற்ற கண்ணும் - எத்தகைய துன்பம் அவர்களைப் பீடித்த இடத்தும், உணர்பவர் - ஆராயும் அறிவினர், அஃதே உணர்ப -உயர்ந்த குடியிலுள்ளார்களாகவே மதிப்பர். (க-து.) அறிவுடையோர் உயர்குடிப் பிறந்தார் வறுமை முதலிய எய்தியக்கண்ணும் அவை நோக்காதுஉயர்வாகவே மதிப்பர். (வி-ம்.) ஆடிய என்பது ஆடி என ஈறுதொகுத்தலாயிற்று -இணர் ஓங்கி வந்தார் என்பது உயர்குடிப் பிறந்தார்என்பதை உணர்த்துவது. 'அளறாடிக்கண்ணும் மணிமணியாகி விடும்' என்பது பழமொழி. (4) 73. கற்றதொன் றின்றி விடினும் குடிப்பிறந்தார் மற்றொன் றறிவாரின் மாணமிக நல்ரால் பொற்ப உரைப்பான் புகவேண்டா கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல். (சொ-ள்.) கற்றது ஒன்று இன்றி விடினும் - கற்றது ஒன்றில்லையாயினும், குடிப்பிறந்தார் - நற்குடிப்பிறந்தார், மற்று ஒன்று அறிவாரின் - ஒன்றைமட்டும் அறிந்தாரைவிட, மாண - நற்குணங்களில் மாட்சிமைப்பட, மிக நல்லர் - மிகச் சிறந்தோர்களே யாவார்கள். பொற்ப உரைப்பான் புகவேண்டா - கற்றோர் அவர்களிடம் நற்குணங்களை அழகுபட விரித்துரைக்கப் புகவேண்டுவதில்லை. கொல்சேரி துன் ஊசி விற்பவர் இல் - கருமாருடைய சேரியில் தையல் ஊசியை விற்கப் புகுவார்இல்லையாதலால். (க-து.) உயர்குடிப் பிறப்பின்றிக் கல்வி ஒன்றே உடையாரைவிட உயர்குடிப்பிறந்தார் சாலச் சிறந்தவர்களே யாவார்கள். (வி-ம்.) உயர்குடிப் பிறந்தாரிடம் நற்குணங்கள் இயல்பாகவே உள்ளன. கற்றாரிடம் இயல்பாகவே நற்குணங்கள் அமைந்திருத்தல் மிகவும் அரிது, இல்லை என்றுகூடக் கூறலாம். ஆகையாற்றான், 'குடிப்பிறந்தார் மற்றொன்றறிவாரின் மாணமிக
|