பக்கம் எண் :

52

(சொ-ள்.) பல் ஆநிரை புறங்காத்த நெடியோனே யாயினும் - பலவாகிய பசுக்கூட்டங்களைக் காத்த நீண்ட வடிவெடுத்த திருமாலேயாயினும், உரைத்தால் - அவையில் ஒருவனை இகழ்ந்துரைத்தால், உரைபெறுதல் உண்டு - (தாமும் அவனால்) இகழ்ச்சியுரையை அடைதல் உண்டு. (ஆகையால்), பல்லார் அவை நடுவண் - நல்லோர் பலரும் கூடியிருக்கும் அவையின் இடையே, பால்பட்ட சான்றவர் - நன்னெறிப்பட்டு ஒழுகும் சான்றோர், ஒருவரையும் உள் ஊன்ற சொல்லார் -எவரையும் மனம் உளையும்படி இகழ்ந்து கூறார்.

(க-து.) சான்றோர் அவை நடுவே, யாரையும்இகழ்ந்து கூறார்.

(வி-ம்.) 'நிரைப்புறங் காத்த நெடியோனே யாயினும்' என்று உயர்த்துக் கூறுதலால், இந்நூலாசிரியர் திருமாலிடம் அன்புடையார் என்பது பெறப்படும். 'ஆவிற்கு அரும்பனி தாங்கிய மாலையும்'என்பதும் இக்கருத்தை வலியுறுத்துகிறது.

'உரைத்தால் உரைபெறுதல் உண்டு' என்பது பழமொழி.

(7)

76. எனக்குத் தகவன்றால்என்பதே நோக்கித்
தனக்குக் கரியாவான் தானாய்த் - தவற்றை
நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் காணார்
எனச்செய்யார் மாணா வினை.

(சொ-ள்.) தென்னவனும் - பாண்டியனும், எனக்கு தகவு அன்று என்பதே நோக்கி - எனக்குத் தகுதியன்று என்பதனை ஆராய்ந்து அறிந்து, தனக்கு கரியாவான் தானாய் - தனக்குச் சான்றாவான் தானேயாய் நின்று, தவற்றை நினைத்து - கதவையிடித்த குற்றத்தை நினைத்து, தன் கை குறைத்தான் - தனது கையை வெட்டி வீழ்த்தினான். (ஆகையால்) காணார் என செய்யார் மாணா வினை - அறிவுடையோர் பிறர் காண்டலிலர் என்பது கருதிச்செய்தலிலர் மாட்சிமைப்படாத செயலை.

(க-து.) அறிவுடையோர் பிறர் காணாமை கருதித் தீயசெயல்களைச் செய்யார்.

(வி-ம்.) 'எனக்குத் தகவு அன்றால்' என்றது பிறர் குற்றங்காணின் ஒறுக்கும் இயல்பையுடைய தான் தன்குற்றம் கண்டவிடத்து ஒறுக்காதிருத்தல் தகுதியன்று என்பதனை நினைத்து என்றவாறு. தவறாவது கதவையிடித்த குற்றம். அஃதாவது, கீரந்தையின் ஐயம் நீங்குதற்பொருட்டு ஒவ்வொரு வீடுகளின் கதவினையும் இடித்தமை. இதுவன்றிக் கீரந்தை மனைவியைத்