பக்கம் எண் :

54

காடு ஒட்டல் இல் - கடலோடு துரும்பு பொருந்துதல் இல்லை (அதுபோல), மடங்கி பசிப்பினும் - (தமது உடம்பு) ஒடுங்கும்படி பசித்தாராயினும், மாண்புடையாளர் - மாட்சிமை உடையார், பிறர் உடைமை தொடங்கி மேவார் - பிறர் பொருளைத் தாம் கொள்ளத் தொடங்க விரும்பார்.

(க-து.) பெரியோர் பிறர் பொருளை விரும்பார்.

(வி-ம்.) தொடங்கி செய வென் எச்சப்பொருண்மையது. பசிப்பினும் என்பது தாங்கமுடியாத இறுதிநிலை. கடல் துரும்பினைத் தன்னோடு கொள்ளாது ஒதுக்குதல்போல் பெரியோர் பிறர் பொருளை விரும்பாதுநீக்குவார்கள்.

'கடலொடு காட்டு ஒட்டலில்' என்பது பழமொழி.

(10)

79. நிரைதொடி தாங்கிய நீடோள் மாற்கேயும்
உரையொழியா வாகும் உயர்ந்தோர்கட் குற்றம்
மரையாகன்(று) ஊட்டும் மலைநாட! மாயா
நரையான் புறத்திட்ட சூடு.

(சொ-ள்.) மரையா கன்று ஊட்டும் மலைநாட - பெண் மான் தனது கன்றிற்குப் பால் அளிக்கும் மலைநாடனே!, நிரை தொடி தாங்கிய நீள்தோள் மாற்கு - வரிசையாகத் தோள் வலயத்தைத் தாங்கிய நீண்ட தோளையுடைய திருமாலுக்கு, ஏயும் உரை ஒழியா ஆகும் - பொருந்தியிருக்கும் குற்றங்கள் ஒருநாளும் விட்டு நீங்கா. (ஆதலால்), உயர்ந்தோர்கண் குற்றம் - எல்லாவகையினுமுயர்ந்தாரிடத்துள்ள குற்றம், நரைஆன் புறத்திட்ட சூடு - வெண்மையாகிய மாட்டின்மேல் இட்ட சூடுபோல், மாயா - ஒருநாளும் மறையா.

(க-து.) பெரியோர் செய்த குற்றம்மறையாது.

(வி-ம்.) வெண்மையான மாட்டின்மேல் இட்ட சூட்டினை அவ்வெண்மை நிறம் எடுத்துக்காட்டுதல்போல, அறிவுடையார் செய்த குற்றங்களையும் அவரறிவுடைமையே விளக்கிக் காட்டும். ஆகவே, அவை மறைதலொழிந்து பிறர்க்கு விளங்கித்தோன்றும் என்பதாம்.

'நரையாம் புறத்திட்ட சூடு' என்பது பழமொழி.

(11)

80. கன்றி முதிர்ந்த கழியப்பன் னாள்செயினும்
ஒன்றும் சிறியார்கண் என்றானும் - தோன்றாதாம்
ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்
குன்றின்மேல் இட்ட விளக்கு.