பக்கம் எண் :

57

(வி-ம்.) கடன் கடம் என எதுகைநோக்கி வந்தது, 'இடம் கண்டு அறிவோம் என்றெண்ணியிரார்' என்றமையால். செல்வம் வரும் என்று பலமுறை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தவர்கள் என்பது பெறப்படுதலின், நெடுநாட்களாக வறுமையால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள் என்பதறியப்படும். 'அடர்ந்து வறியராய்' என்பதன் பொருள் இது. தொடர்ந்து வறியராய் இல்லா தொழியின், செல்வம் பெற்றால் செய்வோம் என்ற கருத்துத் தோன்றாதாகும்.

'கடங்கொண்டும் செய்வார் கடன்' என்பது பழமொழி.

(2)

83. மொய்கொண் டெழுந்த அமரகத்து மாற்றார்வாய்ப்
பொய்கொண் டறைபோய்த் திரிபவர்க்(கு)
மையுண் டமர்ந்தகண் மாணிழாய்! சான்றவர்
கையுண்டும் கூறுவர் மெய்.

(சொ-ள்.) மை உண்டு அமர்ந்த கண் மாண் இழாய் - மை பூசப்பெற்றுப் பொருந்தி இருக்கின்ற கண்களையும் மாட்சிமைப்பட்ட கலன்களையும் உடையாய், மொய்கொண்டு எழுந்த அமரகத்து - (தம்முட் பகைகொண்டு போர் செய்யும் பொருட்டுச் சேனைகள்) வீரத்தோடு நிற்கின்ற போரிடத்தில், மாற்றார்வாய் பொய்கொண்டு - பகைவர் கூறும் பொய்யான உரைகளைக் கேட்டு, அறைபோய் திரிபவர்க்கு - கீழறுக்கப்பட்டுத் திரிபவர்களுக்கு, என்கொலோ - மெய்யுரையால் என்ன பயனுண்டு? ஒரு பயனும் இல்லை (ஆகையால்) சான்றவர் கை உண்டும் மெய் கூறுவர் - அறிவு நிறைந்தோர் பிறர்கைப்பொருளை உண்டாராயினும் உண்மையே கூறுவார்கள்.

(க-து.) பெரியோர்கள் பிறர்கைப் பொருளைஉண்டாராயினும் உண்மையையே கூறுவார்கள்.

(வி-ம்.) அறைபோதல், கீழறுக்கப்படுதல் என்பன லஞ்சம் பெற்றுப் பகைவரை யடைதல் என்ற பொருளைக்கொடுப்பனவாம்.

'சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய்' என்பது பழமொழி.

(3)

84. ஆண்டீண் டெனவொன்றோ வேண்டா அடைந்தாரை
மாண்டிலார் என்றே மறைப்பக் கிடந்ததோ?
பூண்டாங் கிளமுலைப் பொற்றொடி! பூண்ட
பறையறையார் போயினார் இல்.