பக்கம் எண் :

63

பெரியாரோடு இணக்கம் பெற்ற சிறியாரை அவரை ஒப்பமதித்து நட்புப் பூணார்.

'தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல்' என்பது பழமொழி.

(2)

92. தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன
வெந்தொழில ராய வெகுளிகட்குக் கூடுமோ?
மைந்திறை கொண்ட மலைமார்ப! ஆகுமோ?
நந்துழுத எல்லாம் கணக்கு.

(சொ-ள்.) மைந்து இறைகொண்ட மலைமார்ப - வலிமை தங்கிய மலைபோன்ற மார்பையுடையாய்!, நந்து உழுத எல்லாம் கணக்கு ஆகுமோ - நத்தையாற் கீறப்பட்டன யாவும் எழுத்து ஆகுமோ? (ஆகா) (அதுபோல), தம்தொழில் ஆற்றும் தகைமையார் - தம்முடைய தொழில் திறமையுற நடாத்தும் தன்மையுடையார், செய்வன - செய்கின்ற செயல்கள், வெம்தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ -கொடுஞ்செயலை உடையாராகிய சினமுடையவர்களுக்குச்செய்தல் இயலுமோ? (இயலாது).

(க-து.) மேன்மக்கள் செய்யும் காரியங்கள்கீழ்மக்களுக்குச் செய்ய இயலா.

(வி-ம்.) தவம் செய்வார் தங்கருமம்செய்வார் என்றபடி தந்தொழில் ஆற்றும்தகைமையார் தவத்தைச் செய்யும் துறவிகள் ஆவர்.உடம்பிற்கு வருத்தம் வருமென்றொழியாது தவத்தினைச்செய்ய அநாதியாகத் துன்பம் எய்தி வருகின்ற உயிர்ஞானம் பிறந்து வீடுபெறுமாகலின் தவம் செய்தல் தம்தொழில் எனப்பட்டது.

ஆகுமோ நந்து உழுத எல்லாம்கணக்கு என்பது பழமொழி.

(3)

93. பூத்தாலும் காயா மரமுள மூத்தாலும்
நன்கறியார் தாமும் நனியுளர் - பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்(கு)
உரைத்தாலும் தோன்றா துணர்வு.

(சொ-ள்.) பூத்தாலும் காயா மரமுள - பூத்தவிடத்தும் காய்க்கப்பெறாத பாதிரி முதலாகிய மரங்கள் உள்ளன,மூத்தாலும் -