பக்கம் எண் :

66

அவர்களுக்கு விதித்த விதி அஃதென்றுணர்ந்துதிருத்துதலை ஒழிதல் வேண்டும்.

கையுளதாகிவிடினும் குறும்பூழ்க்குச்செய்யுளதாகும் மனம்' என்பது பழமொழி.

(7)

97. கருந்தொழில ராய கடையாயார் தம்மேல்
பெரும்பழி யேறுவ பேணார் - இரும்புன்னை
புன்புலால் தீர்க்கும் துறைவ! மற் றஞ்சாதே
தின்ப தழுவதன் கண்.

(சொ-ள்.) இரு புன்னை புன்புலால் தீர்க்கும் துறைவ - பெரிய புன்னையது பூக்கள் புல்லிய புலால் நாற்றத்தைப் போக்கும் கடற்றுறையை உடையவனே!, தின்பது அழுவதன்கண் அஞ்சாது - உண்ண விரும்புவது உண்ணப்படும் பொருளின் துன்பத்தைக்கண்டு அஞ்சுவதில்லை (அதுபோல), கருந்தொழிலராய கடையாயார் - கொடிய தொழில்களைப் புரிவோராகிய கீழ்மக்கள், தம்மேல் பெரும்பழி யேறுவ பேணார் - தம்மீது மிக்கபழிசேறலைப் பொருட்படுத்தார்.

(க-து.) கீழ்மக்கள் பழிக்கு அஞ்சார்.

(வி-ம்.) புகழிற்கு வெண்மை நிறம் கூறுதல்போலத் தீமைக்கு இங்கே கருமை நிறம் கூறப்பட்டது. தீமையைத் தருந்தொழில் என்பது பொருள். அறத்திற்கும் வெண்மை நிறமே கூறுதல் மரபு.

'அஞ்சாதே தின்பது அழுவதன்கண்' என்பது பழமொழி.

(8)

98. மிக்க பழிபெரிதும் செய்தக்கால் மீட்டதற்குத்
தக்க தறியார் தலைசிறத்தல் - எக்கர்
அடும்பலரும் சேர்ப்ப! அகலுள்நீ ராலே
துடும்பல் எறிந்து விடல்.

(சொ-ள்.) எக்கர் அடும்பு அலரும் சேர்ப்ப - மணல் மேடுகளில் அடும்பின் பூக்கள் மலரும் கடல் நாடனே!' மிக்க பழி பெரிதும் செய்தக்கால் - மிகுதியான பழிச்செயல்களை மிகவும் செய்தால், அதற்குத் தக்கது அறியார் - அது தீர்த்தற்குத் தக்கதனை அறியாராய், மீட்டு தலைசிறத்தல் - மீண்டும் பழிக்குரிய அச்செயல்களிலே சிறந்து விளங்குதல், அகலுள் நீராலே - ஊரினரால்