செயல்களைச் செய்ய இயலாமற் போவார். நற்குடியிற் பிறந்தார் செல்வம் இல்லாதஇடத்தும் மனச்செம்மையராகலின் தங்குடிக்குரிய கொடைத் தொழிலினின்றும் நீங்கார். இதுபற்றியே கீழ்மக்கள் நற்குடியிற் பிறந்தவராகக் கருதப்படார்என்றது. 'கூதறைகள் ஆகார் குடி' என்பது பழமொழி. (17) 13.கீழ்மக்கள் செய்கை 107. நெறியால் உணராது நீர்மையும் இன்றி சிறியார் எளியரால் என்று - பெரியாரைத் தங்கணேர் வைத்துத் தகவல்ல கூறுதல் திங்களை நாய்குரைத் தற்று. (சொ-ள்.) சிறியார் - அறிவிலார், பெரியாரை - அறிவுடையோர்களை, நெறியால் உணராது நீர்மையும் இன்றி - நெறியால் உணராது தகுதியும் இன்றி, எளியர் என்று - தாழ்மையானவர் என்று நினைத்து, தங்கள் நேர்வைத்து - தங்களுக்கு முன்பு அவர்களை இருக்கச் செய்து, தகவு அல்ல கூறுதல் - தகுதியல்லாத வார்த்தைகளைச் சொல்லுதல், திங்களை நாய் குரைத் தற்று - மதியை நாய் குரைத்தாற் போலும். (க-து.) சிறியோர்கள் பெரியோர்களைப் பார்த்து அடாதன கூறுதல் சந்திரனை நாய் குரைத்தாற் போலும். (வி-ம்.) பெரியார் பெருமை அவரையொப்போரால் அறியப்படுமன்றிச், சிறியோரால் அறியப்படமாட்டாது. அறிவிற் சிறியோராதலின் அவர் பெருமையை அறியும் தகுதியும் இலதாயிற்று. திங்களை நோக்கிக் குரைக்கும் நாய்க்கே ஊறுபாடுண்டாதல்போல, அறிவிலார்க்கே துன்பம் உண்டாம், அவர்க்கு ஊறுபாடு இல்லையாதலோடு இதனை அவர் பொருட்படுத்தவும் மாட்டார். 'திங்களை நாய் குரைத் தற்று' என்பது பழமொழி. (1) 108. மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம் பெறுமாறு, செய்ம்மினென் பாரே - நறுநெய்யுள் கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ இட்டிகை தீற்று பவர்.
|