(சொ-ள்.) திரை துனியால் உலா(வு)ம் நூங்குநீர் சேர்ப்ப - அலைகள் சினங்கொண்டு வீசுதலால் அலைகின்ற கடலை உடைய நாடனே!, பனியால் குளம் நிறைதல் இல் - பனிநீரால் குளம் நிறைதல் இல்லை. (அதுபோல), இனியாரை உற்ற இடர்தீர் உபாயம் - தம்முடைய நட்டாரைப் பற்றிய வருத்தம் தீர்தற்கான முயற்சிகளை, முனியார் செயினும் - வெறுப்பின்றியே செய்தாராயினும், மொழியால் முடியா -அவர் கூறும் முகமனால் அவர் உற்ற துன்பம் நீங்குவதில்லை. (க-து.) தம் நண்பினர் துன்புறுவரேயானால் அதற்கான முயற்சிகளைச் செயலிற்றாமே செய்து நீக்கவேண்டும். (வி-ம்.) நட்டார் உற்ற துன்பத்தை நீக்குவதற்கு மனம், சொல் என்ற இரண்டினும் செயலே மிகவும் வேண்டும். “நவில் தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு” என்பராகலின், அவ்வினிமையைத் தனக்கு அளித்த நட்டாரை இனியார்என்றார். 'பனியால் குளம் நிறைதல் இல்' என்பது பழமொழி. (4) 128. தாம்நட் டொழுகுதற்குத் தக்கார் எனல்வேண்டா யார்நட்பே யாயினும் நட்புக் கொளல்வேண்டும் கானட்டு நாறுங் கதுப்பினாய்! தீற்றாதோ நாய்நட்டால் நல்ல முயல். (சொ-ள்.) கான் அட்டு நாறுங் கதுப்பினாய் - நறு நாற்றத்தால் பிறவற்றை வென்று இயற்கை மணம் வீசுகின்ற கூந்தலை உடையாய்!, நாய் நட்டால் - நாயோடு நட்புச் செய்தால், நல்ல முயல் தீற்றாதோ - சிறந்த உணவாகிய முயல் தசையை உண்பிக்கச் செய்யாதோ? (உண்ணச்செய்யும் அதுபோல), தாம் - செல்வத்தால் மிகுந்த தாம், நட்டு ஒழுகுதற்கு - நண்பு பூண்டு ஒழுகுவதற்கு, தக்கார் எனல் வேண்டா - (நம்மைஒப்ப) இவரும் செல்வத்தால் தகுதியுடையவரா என்றாராய்தல் வேண்டா, யார் நட்பேயாயினும் - வறுமையால் மிக்கவர் நட்பேயானாலும், கொளல் வேண்டும் -அவர் நட்பைப் பெறவேண்டும். (க-து.) செல்வந்தர் வறுமையுடையாரோடும்நட்புச் செய்தல் வேண்டும். (வி-ம்.) 'தாம்' என்பது செல்வத் தருக்கின்கண் பிறந்த சொல்லாதலின் தக்கார், யார் என்பனவற்றிற்கு அதற்கேற்பப் பொருள் கொள்ளப்பட்டது. நட்புக்கொள்வதற்குச் செல்வ
|