பக்கம் எண் :

86

முடையவரா இல்லாதவரா என்று ஆராய வேண்டுவதில்லை குணம், செயல், குடி முதலியன ஆராய்தல் வேண்டும். அங்ஙனம் ஆராயாது நட்டால் மிக்க துன்பத்தினை அடைய நேரிடும். 'நாடாது நட்டலிற் கேடில்லை' என்றும், 'ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை, தான்சாந் துயரம் தரும்' என்றும் கூறப்பட்டிருத்தலின் குணம், செயல், குடி முதலிய ஆராய்தல் வேண்டும். நாயும் தன்னோடு நட்புப்பூண்டார்க்குச் சிறந்த உணவினை அளித்தல்போல;' வறுமைஉடையவராயினும் அவரோடு நட்பில் சிறந்த பயனைப்பெறலாம் என்பது.

கான் - நறு நாற்றம்; 'கானாறுங் குழல்சரியக் கற்பூரவல்லி தலைகவிழ்ந்து நிற்ப' என்பது காண்க.

'தீற்றாதோ நாய் நட்டால் நல்ல முயல்' என்பது பழமொழி.

(5)

129. தீர்ந்தேம் எனக்கருதித் தேற்றா தொழுகித்தாம்
ஊர்ந்த பரிவும் இலராகிச் - சேர்ந்தார்
பழைமைகந் தாகப் பரியார் புதுமை
முழநட்பிற் சாணுட்கு நன்று.

(சொ-ள்.) தீர்ந்தேம் எனக் கருதி - இவரிடத்து வேற்றுமையின்றிப் பூண்ட நட்பினை உடையோம் என்று கருதி, தேற்றாது ஒழுகி - ஆராயாது தீயனவற்றைச் செய்து, தாம் ஊர்ந்த பரிவும் இலராகி சேர்ந்தார் தம்மிடத்து இயல்பாக இருந்த சிறிய அன்பும் இல்லாதவர்களாகி ஒழுகுபவர்களது, பழைமை கந்தாகப் பரியார் புதுமை - பழைமையையே பற்றுக் கோடாகக் கொண்டு புதிய நட்பினை நீக்கார் அறிவுடையோர், முழம் நட்பின் சாண் உட்கு நன்று - தீயன செய்யும் நட்பு முழம் இருத்தலைவிட அஞ்சத்தகும் நட்பு சாண்இருத்தலே நல்லது.

(க-து.) தீயன செய்யும் பழைய நட்பைவிட அஞ்சத்தகும் புதியநட்பே நல்லது.

(வி-ம்.) 'ஊர்ந்த பரிவு' என்பது மிகக் குறைந்த அன்பு என்பதை விளக்கிற்று. அதுவும் அவர் செயலன்று; அன்பின் செயல் என்பார் ஊர்தலை அன்பின் செயலாகக் கூறினார். புதிய நட்பினர் தீயன செய்வாரோ வென்ற அச்சம் இருத்தலால் முன்னரே அறிந்து காக்கப்படும். பழைய நட்பினரி டத்தில் அத்தகைய ஐயமின்மையால் காக்கப்படாதாயிற்று. ஆகவே பழைய நட்பினர் செய்யும் தீமை அறிந்து காக்கப்படாமையானும், புதிய நட்பினர் தீமை அறிந்து காக்கப்படுதலினாலும்,