கள். எண் - எண்ணுதல்; ஆராய்ச்சி. ‘வேந்தன் தன்னாடு வாட்டான் நன்றென்றல் வனப்பு’ என்பதை வேந்தன் வனப்பு தன் நாடு வாட்டான் நன்று என்றல் என்று பொருளுரைக்கப்படுவது கொண்டு கூட்டுப் பொருள்கோள். (9) கொன்றுண்பா னாச்சாங் கொடுங்கரிப்போ வானாச்சா நன்றுணர்வார் முன்கல்லா னாவுஞ்சா- மொன்றானுங் கண்டுழி நாச்சாங் கடவான் குடிப்பிறந்தா னுண்டுழி நாச்சா முணர்ந்து. (ப.ரை.) கொன்று - ஓருயிரைக் கொன்று, உண்பான் - அதன் தசையைத் தின்பவனுடைய, நா - நாக்கானது, சாம் - அற்று விழும், கொடும் கரிபோவான் - பொய் சான்று கூறப்போகின்றவனுடைய நா சாம் - நாக்கானது அற்று விழும், நன்று உணர்வார் முன் - நன்றாகக் கற்றறிந்தவர்களுக்கு எதிரில், கல்லான் நா சாம் - கற்றுணராதவனுடைய நாக்கானது அடங்கும், கடவான் - தான் சொல்லிய சொல்லைக் (கடவாத) நெறியினடப்போன், ஒன்று கண்டுழி - (தனிசு தண்ட வேண்டி வந்தா) னொருவனைப் பார்த்த விடத்து, நா சாம் - (தான் வாக்குச் சொன்னவனிடம் பேசுவதற்கு) நாவெழாது, குடி பிறந்தான் - உயர்குடியிற் பிறந்தவன், உண்டுழி - தான் யாதானு மொருவனிடத்து ஒரு நன்மையைப் பெற்றுப் பின் அவன் குற்றஞ் செய்ததாக அறிந்தபொழுது, உணர்ந்து - அதனை யுணர்ந்து, நா சாம் - நாவால் அதனைப் பிறர்க்குச் சொல்லான்;(எ.று). (ப-பொ-ரை) உயிர்களைக் கொன்றுண்பானுடைய நாச்சாம், ஒருவர் பாங்கிலே நின்று பொய்ச்சான்று போவானுடைய நாவுஞ்சாம், மிகக் கற்றுணர்ந்தோர் முன்பொரு மறுமாற்றஞ் சொல்லமாட்டாது கல்லாதானுடைய நாவுஞ்சாம், தனிசு வேண்டிவந்தா னொருவனைக் கண்டால் தனிசு கொண்டவனுடைய நாவுஞ்சாம், குடிப்பிறந்தா னொருவ
|