னுடைய நா ஒருவனுதவி பெற்ற விடத்து அவ்வுதவி செய்தான் திறந்து ஒரு தீமை சொல்லமாட்டாது மற்றவன் செய்த நன்றியை நினைத்துச்சாம். (க-ரை) புலாலுண்போன் முதலியவர்களின் நாக்கள் சாம். கொன்றுண்பவனது நாவைக் காலதூதுவர் அறுத்தெடுப்பாராதலின், “கொன்றுண்பான் நாச்சாம்“ என்றார். கொடுங்கரி - பண்புத்தொகை. கண்டுழி, உண்டுழி - உழி இரண்டும் ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபுகள். கண்டவுழி உண்டவுழி என்பன அகரந் தொக்குக் கண்டுழி உண்டுழி என வந்தன. உயிர், தசை - இசையெச்சங்கள். (10) சிலம்பிக்குத் தன்சினை கூற்றநீள் கோடு விலங்கிற்குக் கூற்ற மயிர்தான்-வலம்படா மாவிற்குக் கூற்றமா ஞெண்டிற்குத் பன்பார்ப்பு நாவிற்கு நன்றல் வசை. (ப.ரை.) சிலம்பிக்கு - சிலந்திப் பூச்சிக்கு, தன்சினை - தன்னுடைய கருவாகிய முட்டையே, கூற்றம் - எமனாகும், விலங்கிற்கு - எருது முதலிய மிருகங்களுக்கு, நீள்கோடு - நீண்ட கொம்புகளே, கூற்றம் - எமனாகும், வலம்படா - வெற்றி யுண்டாகாத, மாவிற்கு - கவரிமானுக்கு, மயிர்தான் - அதன் மயிரே, கூற்றம் - எமனாகும், ஞெண்டிற்கு - நண்டுக்கு, தன் பார்ப்பு - தன்குஞ்சுகளே, (கூற்றம்) - எமனாகும், நாவிற்கு - ஒருவனுடைய நாவுக்கு, நன்று அல் - நன்மையல்லாத, வசை - பழிமொழிகள், (கூற்றம்) - எமனாகும்; (எ-று.) (ப-பொ-ரை) சிலம்பிக்குத் தன் முட்டை சாக்காட்டைக் கொடுக்குமாதலாற் கூற்றமாம், நீண்டதங்கொம்புகள் துன்பங் கொடுக்குமாதலால் விலங்கிற்கும் அவையே கூற்றமாம், வென்றியில்லாத கவரிமாவிற்குச்
|