பக்கம் எண் :

16

சேவகமுஞ் செந்தமிழ் தேற்றான் கவிசெயலு
நாவகமே நாடி னகை.

(ப.ரை.) நான் இலான் - நாணமில்லாதவனது, சால்பும் - அமைதியும், நடை இலான் - நல்லொழுக்கம் இல்லாதவனது, நல்நோண்பும், ஊண் இலான் - தனக்கே உண் பொருளில்லாதவன், செய்யும் உதாரதையும் - செய்கின்ற ஈகையும், ஏண் இலான் - வலிமையில்லாதவனது, சேவகமும் - வீரத் தொழிலும், செந்தமிழ் - செந்தமிழில், தேற்றான் - (தன் மனதைத்) தெளியச் செய்யாதவன், கவி செயலும் - பாட்டுக்களைச் செய்தலும், நா அகமே நாடின் - நாவினிடத்துக் கொண்டு ஆராயின், நகை -சிரிப்புக்கு இடமாம்; (எ-று)

(ப-பொ-ரை) நாணில்லாதவன் அமைதியும், சீலங்களைச் செய்யாதான் கொள்ளு நல்ல நோன்பும், தனக் குண்ணும் பொருளில்லாதான் செய்யும் வண்மையும், வலியில்லாதான் சொல்லும் வீரமும், செந்தமிழறியாதான் கவியைச் செய்தலுமென இவ்வைந்தும் நாவகத்தாலே மேவியாராயின் நகையாம்.

(க-ரை) நாணமில்லாதவன் அமைதி, நன்னடையில்லாதவன் நோண்பு, உண் பொருளில்லாதவன் ஈகை, வலியில்லாதவன் வீரம், செந்தமிழ்த் தேர்ச்சியில்லாதவன் கவி பாடுதல் என்னும் இவ்வைந்தும் பயனிலை என்பதாம்.

சால்பு என்பது குணங்களானிறைந்த தன்மை. சால்பினை ஆக்கங் குணங்கனைந்தனுள் நாணம் ஒன்றாதலாலும், இழிதொழிலைச் செய்ய நாணாத ஒருவனுக்குச் சால்புடைமை அமையாதாதலானும், ‘நாணிலான் சால்பு நகைதரும்,‘ என்றார். உதாரதை - பெருங்கொடைத் தன்மை. நடை - நன்னடை. தேற்றான் - பிறவினை.

(12)

கோறலு நஞ்சூனைத் துய்த்தல் கொடுநஞ்சு
வேறலு நஞ்சுமா றல்லானைத்-தேறினா