பக்கம் எண் :

2

(கருத்துரை) நிலைபெற்ற கடவுளின் அடிகளை வணங்கிப் போற்றி இந்நிலவுலகினர்க்கு நன்மை யுண்டாகுமாறு இந்நூலை யான் கூறுவேன்.

இச்செய்யுளில் கடவுள் வணக்கமும் செயப்படு பொருளும் உரைக்கப்படுகின்றன வாதலின், இது சிறப்புப்பாயிரம் எனப்படும். ஆசிரியர், தாம் எடுத்துக்கொண்ட நூல் இடையூரின்றி இனிது முடிதற் பொருட்டு ஆன்றோர் முறைப்படி இக் கடவுள் வாழ்த்துக் கூறினர்.

முழுதுணர்தல் - எல்லாம் அறிதல். மூவாதான் - மூ என்னும் பகுதியடியாகப் பிறந்த எதிர்மறை வினையாலணையும் பெயர். மூவாதான் என்றமையால் கடவுளின் என்று மொருபடித்தா யிருக்குந்தன்மை யுணரப்படும். பழுது - வழிபாடு செய்தலில் தவறுதல். பணிதல் - தன்முயற்சியின்றி யடங்குதல். உறுதி - அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப் பொருள்கள். சில வெண்பா என்பது கருவியாகு பெயராய்ச் சில வெண்பாக்களாலாகிய நூலையுணர்த்திற்று. உறுதியாக என்பது உறுதியா எனக் ககரந்தொக்கு நின்றது. பாய - இறந்த காலப் பெயரெச்சம். ‘சிறுபஞ்சமூலம்‘ என்ற இந்நூற் பெயர்க்கேற்ப இதன் ஒவ்வொரு செய்யுளிலும் ஐந்து பொருள்கள் அமைந்திருத்தல் வேண்டும். அம்முறைப்படி, இக் கடவுள் வாழ்த்துச் செய்யுளிலும் முக்குற்ற மொழித்தலில் மூன்றும், முழுதுணர்தல் ஒன்றும், மூவாமை ஒன்றும், ஆக ஐந்து பொருள்கள் அமைந்திருத்தல் காண்க.

(1)

நூல்

ஒத்த வொழுக்கங் ரெலைபொய் புலால்களவோ
டொத்த விவையல வோர்நாலிட்-டொத்த
உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோற் கூறீர்
சிறுபஞ்ச மூலஞ் சிறந்து.

(ப.ரை.) ஒத்த - பொருந்திய, ஒழுக்கம் - நன்னடக்கை, கொலை - கொல்லுதல், பொய் - இல்லது கூறல், புலால் - புலால்