உண்ணுதல், களவு ஓடு-திருட்டு ஆகிய இவற்றுடனே, ஒத்த - பொருந்திய, இவை அல இவற்றுக்கு எதிரிடையாகிய, ஓர் - ஒரு, நூல் இட்டு - (கொல்லாமை, பொய் கூறாமை, புலாலுண்ணாமை, கள்ளாமை என்னும்) நான்கையுஞ் சேர்த்து, ஒத்த - உலகிற் பொருந்திய, உறு - மிகுதியாகிய, பஞ்ச மூலம் - சிறுவிலைக் காலத்தின் காரணத்தை, தீர் - அகற்றுகின்ற, மாரி போல் - மழையைப் போல, சிறு பஞ்சமூலம் - (நோய்களை யகற்றும்) சிறு பஞ்சமூலங்களைப் போன்று இந்நூலை, சிறந்து - சிறப்புற்று, கூறீர்-(கல்வியறிவாளரே! நீங்கள் மக்கள் தீய குணங்களை நீக்கி நற்குணங்களைப் பெருக்குமாறு)சொல்லக்கடவீர்; (ப-பொ-ரை) பொருந்தியவொழுக்கங் கொலை பொய் புலால் களவோ டொத்த விவையன்றி யிவற்றுக்கு மறுதலையாகிய நான்கு மென்று சொல்லப்பட்ட இவ்வைந்து மகப்பட்ட மிக்க பஞ்சத்தின் மூலத்தைத் தீர்க்கு மாரிபோலச் சிறு பஞ்சமூலமென்று மருந்தாக கூறீர் மிக்கு. (க-ரை)பஞ்சத்தைத் தீர்க்கும் மழையைப்போல மக்கள்வினைகளைத் தீர்க்கும் இச் சிறுபஞ்ச மூலமும் என்க. இந்நூலில் ஒழுக்கம் கொலையின்மை முதலிய ஐந்தைப் பற்றிய பொருள்களே வருவதால், இவ்வைந்தையுஞ் சேர்த்துச் சிறுபஞ்சமூலங் கூறீர் என்றார். கொல்லாமை, பொய்யாமை, புலாணுண்ணாமை, கள்ளாமை முதலியனவும் ஒழுக்கத்தில் அடங்கு மெனினும், சிறந்த அறங்களாக நிற்பதால் அவை நான்கையும் தனித்தனி அறமாகக்கொண்டு மற்ற அறங்களை யெல்லாம் ஒன்றாக்கி இவ்வைந்தையுஞ் சேர்த்துச் சிறுபஞ்சமூலமெனக் கூறினார். சிறு பஞ்சமூலம்-உவமையாகுபெயர். சிறு பஞ்சமூலங்களாவன சிறிய ஐந்து வேர்கள், அவை கண்டங்கத்திரி வேர், சிறு வழுதுணை வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வர், நெருஞ்சில் வேர். இந்நூலிலுள்ள ஒவ்வொரு வெண்பாவும்
|