உயிர்க்குறுதி பயக்கும் அவ்வைந்து பொருள்களையுடைமையால், இந்நூலும் சிறு பஞ்சமூலம் எனப்படலாயிற்று, ஒழுக்கமும், ஓர் நாலும் எனக்கூட்டுக உறு - மிகுதி, உரிச்சொல். தீர்மாரி - வினைத்தொகை, அல எதிர் மறை வினையாலணையும் பெயர். கூறீர் என்பதற்கு நீங்கள் என்பது வினை முதலாக வருவிக்கப்பட்டது. (2)
பொருளுடையான் கண்ணதே போக மறனு மருளுடையான் கண்ணதே யாகு-மருளுடையான் செய்யான் பழிபாவஞ் சேரான் புறமொழியு முய்யான் பிறர்செவிக் குய்த்து. (ப.ரை.) போகம் - உலக இன்பமானது, பொருள் உடையான் கண்ணதே ஆகும் - செல்வப் பொருளுடையவனிடத் துண்டாகும், ஆறனும் - நல்லொழுக்கமும், அருள் உடையான் கண்ணதே ஆகும் - இரக்க முள்ளவனிடத்தி லுள்ளதாகும், அருள் உடையான் - அத்தகைய அருள் யுடையவன் பழி செய்யான் - பழிக்கப்படுந் தீய செயல்களைச் செய்யான், பாவம் சேரான் - தீவினையைச் செய்ய மனத்திலும் நினையான், புறமொழியும் - புறங்கூற்றுச் சொற்களையும், பிறர் செவிக்கு- மற்றையவர் காதுகளில், உய்த்து - செலுத்தி, உய்யான் - பிழைக்க மாட்டான்; (எ.று). (ப-பொ-ரை) பொருளுடையான் கண்ணதே யாகும் இன்பம்; அறவினையும் உயிர்கள்மேல் அருளுடையான் மாட்டேயாகும்; அவ்வருளுடையான் பழியைச் செய்யான், பாவத்தை யடையான், பிறர் செவியின்கட் செலுத்திப் பிறரைப் பழிபடக் கூறும் புறமொழிகளையும் நடத்தான். (க-ரை) பொருளுள்ளவனுக்கு இன்பம் பெருகும்; அருளுள்ளவனுக்கு அறம் விளையும்; அருளுள்ளவன் பழியையும், தீவினையையும் புறங்கூறுதலைஞ் செய்யான். ‘பொருளுடையான் கண்ணதே போகம்.‘ என்றதனாற் போகத்தைத் தரக்கூடிய பொருளைத் தேடிக்கொள்ள வேண்டியது இன்றியமையாத தென்பது பெறப்படும். அருளிலார்க் கவ்வுலக மில்லை‘ என்ற குறட்பொருள், ‘அறனும் அருளுடையான் கண்ணதே
|