பக்கம் எண் :

5
யாகும்,‘ என்பதில் அடங்கி யுள்ளது. அறன் - அறம் என்பதன் போலி. ஆகும் என்பது தீபகமாக இரண்டிடத்துங் கூட்டப்பட்டது. செவிக்கு - ஏழனுருபு நான்கனுருபாக மயங்கிவந்த உருபு மயக்கம். செவியிற்கு என்றும் பாடம்.

(3)

கற்புடைய பெண்ணமிர்து கற்றடங்கி னானமிர்து
நற்புடைய நாடாமிர்தந் நாட்டுக்கு- நற்புடைய
மோகமே சேர்கொடி வேந்தமிர்து சேவகனு
மாகவே செய்யி னமிர்து.

(ப.ரை.) கற்பு உடைய பெண் - கற்புள்ள பெண்ணானவள், அமிர்து - தன் கணவனுக்கு அமிர்தம் போல்வாள், கற்று - (அறிவு நூல்களைக்) கற்று. அடங்கினான் - (அவற்றின் வழியல்) அடங்கி நிற்பவன், அமிர்து - (உலகத்தார்க்கு) அமிர்தம் போல்வான. நற்பு உடைய நாடு - நன்மையுள்ள நாடு, அமிர்து - (அந்நாட்டரசனுக்கு) அமிர்தம் போன்றது, அ நாட்டுக்கு - அந்த நாட்டுக்கு, நற்புடைய மேகமே சேர் கொடி வேந்து - நன்மையைச் செய்கின்ற மேகத்தை யளாவுகின்ற கொடியையுடைய அரசன், அமிர்து - அமிர்தம் போல் இன்பஞ் செய்வான, சேவகனும் - (அவ்வேந்தனது) சேவகனும், ஆகவே செய்யின் - (அவ்வேந்தனுக்கு) நன்மையானவற்றையே செய்வானாயின், அமிர்து - அவ்வேந்தனுக்கு அமிர்தம் போல்வான்; (எ-று)

(ப-பொ-ரை) கற்புடைய பெண் தனது கொழுநற்கு அமிர்தோ டொக்கும், கற்றுவைத்துப் பொறிகளைந்தையும் அடக்கினான் உலகத்தார்க்கு அமிர்தோ டொக்கும், நற்செயல்களையுடைய நாடுகள் அந்நாடாளும் அரசரக்கு அமிர்தோ டொக்கும், அந்நாட்டிற்கு மழைபோல நன்மையைச் செய்யும் மேகத்தைச் சேர்ந்த கொடி வேந்தனமிர்தோ டொக்கும், அவன் சேவகனும் அவ்வரசற்கு நன்மையாகவே செய்யின் அமிர்தோ டொக்கும்.