வேண்டி னறிமடம் வேண்டேல் பிறர்மனை யீண்டி னியையுந் திரு. (ப.ரை.) உடம்பு - உடலெடுத்தல், ஒழிய வேண்டின் - உன்னை விட்டு. நீங்கவேண்டுமாயின், உயர்தவம் - உயர்ந்த தவத்தை, ஆற்று - செய்வாயாக, ஈண்டு - இவ்வுலகத்தில், இடம் - நீ இருக்கும் இடமானது, பொழிய வேண்டுமேல் - புகழான மேன்மையடைய வேண்டுமானால், ஈகை ஆற்று - (இரப்பவர்க்கு வேண்டியவற்றைக்) கொடுத்தலைச்செய்வாயாக, மடம் பொழிய வேண்டின் - மெல்லிய வீரம் தனக்குள்ளே நிறைய வேண்டினாயாயின், அறி மடம் - அறிவின்கண் அடங்கி யொழுகுக, பிறர்மனை வேண்டேல் - பிறர் மனைவியை விரும்பாதொழிக, ஈண்டின் - சிறிதாயினும் வருவாய் நாடோறும் பொருந்துமாயின், திரு இயையும் - செல்வம் வந்து தானே நிறையும்;(எ-று). (ப-பொ-ரை) பிறப்பான் வரும் உடம்பை நீக்க வேண்டினானாயின் உயர்தவத்தை செய்க, இவ்வுலகத்தினிடமெல்லாந் தன்புகழால் நிறைய வேண்டினானாயின் ஈகையைச் செய்க, மெல்லிய வீரம் தனக்கு நிறைய வேண்டினானாயின் அறிவின்கண் அடங்கி யொழுக, பிறர் மனையாளை விரும்பா தொழிக, சிறிதாயினும் வருவாய் நாடோறும் ஈண்டிற் செல்வம் ஒருவற்கே கூடும். (க-ரை) பிறவி யொழியத் தவமும், புகழ் நிறைய ஈகையும், உள்ளம் தூய்மையாய் நிரம்ப அறிந்தும் அறியாமையும், பிறர்மனை நயவாமையும், வருவாய் நாடோறும் சிறிதாகச் சேர உண்டாகும் செல்வமும் ஒருவற்கு வேண்டற்பாலனவாம். ‘ஈதலிசைபட வாழ்தலதுவல்ல தூதியமில்லை யுயிர்க்கு‘ என்ற மையால் ஈகை ஆற்று எனப்பட்டது. மடம் என்பது மென்மை. ஈண்டு மென்மையின் பயனாகிய இணக்கத்தை யுணர்த்துகின்றது. தான் கூறுவது அறியமாட்டாதாரிடத்து, அவரறியாமையைக்
|