பக்கம் எண் :

23

(ப-ரை.) வாய்ப்பு உடை (ய) - மக்கட்பேறு வாய்த்த, விழைச்சின் - இணைவிழைச்சு (கலவி) போல், நல் விழைச்சு இல்லை - கலவியின் நல்ல தில்லை.

"வாய்ப்புடை வழக்கின் நல்வழக்கில்லை" என்ற பாடம் கொண்டு, சாக்ஷி முதலியன வாய்த்துள்ள வழக்கைக் காட்டிலும் நல்ல வழக்கு வேறில்லை என்றும் உரைப்பார்.

வாய்ப்பு - பேறு, விழைச்சு - இணைவிழைச்சு - கலவி.

புத்திர பாக்கியம் பெறுதலான கலவியே கலவி.

4. வாயா விழைச்சிற் றீவிழைச் சில்லை.

(ப-பொ.) மக்கட்பேற்றின் பொருட்டன்றிக் கலக்கும் கலவிபோலத்தீயதில்லை.

(ப-ரை.) வாய் விழைச்சின் - புத்திர பாக்கியத்தின் பொருட்டன்றிச் சிற்றின்பங் கருதிக் கலக்கும் கல்விபோல், தீவிழைச்சு - தீமையான கலவி, இல்லை - வேறில்லை.

"வாயா வழக்கிற் றீவழக்கில்லை" - பாடபேதம். வாயா - வாயாத, பொருந்தாத. சாக்ஷி முதலியன நன்கு பொருந்தாத வியவகரத்தைப்போல் கெட்ட வியவகாரம் வேறில்லை.

முன் வாக்கியத்தில் கூறினதை வற்புறுத்துமாறு இந்த வாக்கியத்தை எதிர்மறை முகத்தால் கூறினார்.

5. இயைவது கரத்தலிற் கொடுமை யில்லை.

(ப-பொ.) தான் பிறர்க்குக் கொடுக்க இயலும் பொருளை இல்லையென்று கரக்கும் கரப்பிற் கொடுமை யில்லை.

(ப-ரை.) இயைவது - தனக்குக் கூடுமான பொருளை, கரத்தலின் - இரந்தவர்க்கு இல்லை யென்று ஒளித்தலைப்போல், கொடுமை - கொடுமையான செய்கை, இல்லை - வேறில்லை.

"இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்."

"இரவுள்ள உள்ளம் உருகும், கரவுள்ள
உள்ளதூஉ மின்றிக் கெடும்."- திருக்குறள்.