மிக்க பொருளை விரும்பிப் பேராசையுற்றவன் நடுவுநிலைமையில் நின்று நீதியை மேற்கொண்டு நடக்கமாட்டான். வேட்கை - பொருள்களின்மேல் தோன்றும் பற்றுள்ளம். இந்சூத்திரம் அரசனைக் கருதியது. 10. வாலிய னல்லாதோன் தவஞ்செய்தல் பொய் (ப-பொ.) மனத்தின்கண் ‘தூயனல்லாதோன் தவஞ்செய்தல் பொய். (ப-ரை.) வாலியன் அல்லாதோன் - மனத்தில் பரிசுத்தம் இல்லாதவன், தவம் செய்தல் - தவத்தைச் செய்தல், பொய் - பொய்யாம். வாலியன் - (வால் - சுத்தி, இ - சாரியை) சுத்தியுள்ளவன் - சுத்தன். சுத்தமனமுள்ளவனே தவஞ்செய்தற்கு உரியவன். வாலியனல்லாதோன் என்பது "மனத்தது மாசாக மாண்டார். மறைந்தொழுகு மாந்தர்" (திருக்குறள்) என்பதனால் விளக்கும். VIII. எளிய பத்து. 1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம். புகழ்வெய் யோர்க்குப் புத்தேணா டெளிது. (ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து மக்களெல்லாருள்ளும், ஒருவர்க்குப் புகழ் விரும்பின் கடவுளர் வாழு பெறுதல் எளிது. (ப-ரை.) ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட்கெல்லாம் - மக்கள் எல்லாருள்ளும், புகழ் - கீர்த்தியை, வெய்யோர்க்கு - விரும்பினோர்க்கு, புத்தேள்நாடு - தேவலோக மடைதல், எளிது - எளிதாம். புகழை விரும்பி அறஞ்செய்தாரைத் தேவர்கள் தாமே வந்து உபசரித் தழைத்துப்போவர். ஆதலால் அறஞ்செய்தார் சுவர்க்கம் புகுதல் எளிதே என்பதாம்.
|