(இ-ள்.) கற்றாரை - கற்று வல்ல சான்றோரை, கற்றது - தாங் கற்ற கல்விப் பொருளை, உணரார் என - அறியமாட்டாரென்று, மதியார் - நினையாமலும், உற்றாரை - உறவினர் நண்பரையும், அன்னணமும் - அவ்வகையாக, ஓராமல் - அன்பில் உயர்வு தாழ்வுகள் எண்ணாமலும், அற்றார்க்கு - பொருளற்ற வறிஞர்க்கும் பற்றற்ற துறவிகட்கும், உண்டி உறை உள் உடுக்கை - உணவும், மருந்தும், இடமும், உடையும், இவை ஈந்தார் - என்றிவற்றைக் கொடுக்கின்றவர்கள், பண்டிதராய் - அறிஞர்களாய், பயின்று - யாவரானும் மதிக்கப்பட்டு, வாழ்வார் - இனிது வாழ்வார்கள். (ப-பொ-ரை.) கற்றாரைக் கற்றிலரென்று மனதிற் கொள்ளாதே, உற்றாரையு முற்றாரென்று கொள்ளாதே, பொருளற்றார்க்குணவும், மருந்தும், உறையிடமும், உடுக்கையும் பயின்று கொடுத்தா ரறிவுடையாரென்று பிறரான் மதிக்கப்படுவர். (க-து.) பிறரெவரையும் தாழ்வென்று கருதாமல் அற்றார்க்கு வேண்டுவன உதவுவார், அறிவுடையராய்க் கருதப்படுவார். உற்றாரையும் அற்றாரையும் இரட்டுற மொழிந்துகொள்க. அன்னவண்ணமெனற்பாலது அன்னணமென மரீஇயது. கற்றது : வினையாலணையும்பெயர். உண்டி - உண் : பகுதி, து : சாரியை, இ : செயப்படுபொருண்மை விகுதி. உறை - மருந்து; உள் : இடம்; உறை + உள் எனப் பிரிக்க. (9) 10. செங்கோலான் கீழ்க்குடிகள் செல்வமுஞ் சீரிலா வெங்கோலான் கீழ்க்குடிகள் வீந்துகவும் - வெங்கோல் அமைச்சர் தொழிலு மறியலமொன் றாற்ற எனைத்து மறியாமை யான். (இ-ள்.) செங்கோலான் - முறை செய்யும் அரசனும், கீழ்க்குடிகள் - அவன் கீழ்வாழும் குடிகளும், செல்வமும் - அவர்தம் செல்வங்களும், சீர் இலா - முறைமை இல்லாத, வெம் கோலான் - கொடுங்கோலரசனும், கீழ்க்குடிகள் - அவன் கீழ் வாழுங் குடிகளும், (செங்கோல்) வெங்கோல் அமைச்சர் - இவை தமக்கெல்லாம் ஏதுவான செங்கோ லமைச்சர்களுங் கொடுங்கோலமைச்சர்களும், தொழிலும் - அவரவர் தொழில்களும், வீந்துகவும் - ஒருங்கே அழிந்தொழியவும், எனைத்தும் அறியாமை
|