பக்கம் எண் :

11

யான் - சிறிதும் அறிய முடியாமையினால், ஒன்று - இவை தமக்குரிய ஏதுவை, ஆற்ற அறியலம் - முற்றத் தெரிகின்றிலம்.

(ப-பொ-ரை.) செங்கோலானது செல்வமும், அவன் கீழ்வாழுங் குடிகளது செல்வமும், வெங்கோலானது கேடும், அவன் கீழ் வாழுங் குடிகளது கேடும், வெங்கோலமைச்சரது கேடும், அவர் தொடங்கிய வினை முடியாது கெடுதலும், இவ்வாறினையுமொரு திறனறிய மாட்டோம். யாது மெமக்கறியப் பொருந்தாமையின்.

(க-து.) நல்லோரும் வீழ்கின்றார், தீயோரும் வீழ்கின்றாரானமையின், இவற்றின் ஏது ஏதோ அறிகின்றிலமென்பது.

அறியலம் என்றார், உலக நிலையாமைக்குரிய மலத்தின் வலியைச் சுட்டி; மலத்தின் பரப்பும் ஆற்றலும் வரம்பிட்டுணரலாகாமையின், ‘ஆற்ற அறியல' மென்று அறியாமை கூறுமுகத்தால் அவை தம்மை விளங்கவைத்தா ரென்க. ஈண்டுக் கூட்டியுரைக்க வேண்டுவனவெல்லாங் கூட்டிக்கொள்க. ‘வீந்துகவும்' என்பதை ‘உக்கு வீயவு' மென்று விகுதி பிரித்து மாற்றுக. இதன் உம்மை வினையெச்சப் பொருளது.

(10)

11. அவாவறுக்க லுற்றான் றளரானவ் வைந்தின்
அவாவறுப்பி னாற்ற வமையும் - அவாவறான்
ஆகு மவனாயி னைங்களிற்றி னாட்டுண்டு
போகும் புழையுட் புலந்து.

(இ-ள்.) அவா அறுக்கல் உற்றான் . அவாவினைக் கெடுத்தற்குக் கருதியவன், தளரான் - உறுதி தளராமல், ஐந்தின் - ஐம்பொறிகளின் வழிச்செல்லும், அவா அறுப்பின் - அவாவினைக்கெடுப்பானாயின், ஆற்ற அமையும் - அவன் கருத்து மிகவும் நிரம்பும், அவன் - மற்று அவன், அவா அறான் ஆகுமாயின் - ஐம்பொறி அவாவினைக் கெடுத்துக்கொள்ளானானால், அவ் ஐங்களிற்றின் - அவ்வைம் பொறிகளென்னும் யானைகளால், ஆட்டு உண்டு - அலைப்புண்டு, புழையுள் - அவற்றின் புழையாகிய புலமென்னும் வாயிலில், புலந்து போகும் - சென்று துன்புறுவான்.

(ப-பொ-ரை.) மனத்தின்க ணவாவினை யறுப்பான் றொடங்கியவன் றனன்வா வின்றியே நிற்கும். பொறி புலனாகிய நிலங்களாலே மெய்ப்பொருள் மேம்படலென ஐவகைப்பட்ட பொருட்கட் செல்லு மவாவினை மிகவு மறுப்பவ னெல்லாக்