பக்கம் எண் :

13

(க-து.) கொலைக்களம் முதலியவற்றை நச்சாமையும் நோக்காமையும் நன்று.

வார்குத்து, நீர் குத்திச் சுழியும் இடமென்க; வார்க்குத்தென்பது பாடமாயின், நீரினது குத்துமிட மென்றுரைக்க. நீர் நிலைகளிற் சுழிதலுடைய இடங்களே தீமை விளைப்பனவாகலின் அதனை யுணர்த்தற்கு ‘வார்குத்'தென்னுஞ் சொற்பெய்தார்; குத்து : தொழிலாகு பெயர். வார்க்குத்து - பெரிய மற்போர் செய்யுமிடம் எனலுமுண்டு. முச்சாரிகை - மூன்றினது சாரிகை : ஆறாம் வேற்றுமைத் தொகை; மூன்றாகிய சாரிகை யெனின் பண்புத் தொகை. சாரிகை - சுற்றியோடி வருதல். ஓரிடத்து மென்புழி வரும் எண்ணும்மையை ஏனையவற்றோடுங் கூட்டுக. நன்று : குறிப்பு வினைமுற்று : ஈண்டுப் பன்மையினொருமை வந்த வழுவமைதி.

(12)

13. விளையாமை யுண்ணாமை யாடாமை யாற்ற
உளையாமை யுட்குடைத்தா வென்று - களையாமை
நூற்பட்டார் பூங்கோதாய் நோக்கி னிவையாறும்
பாற்பட்டார் கொண்டொழுகும் பண்பு.

(இ-ள்.) நூல்பட்டு ஆர் - நூலினாற் கோக்கப்பட்டு நிரம்பிய , பூ கோதாய் - மலர்மாலை யணிந்த கூந்தலை யுடைய பெண்ணே, நோக்கின் - ஆராயின், விளையாமை - உழவாற்பயிர் விளைக்காமையும், உண்ணாமை - ஐம்பொறிகள் களிப்புறவுண்ணாமையும், ஆடாமை - பயனில் சொற்களைப் பேசாமையும், ஆற்ற உளையாமை - பிறரால் விளையுந் தீமைகட்கு மிகவும் வருந்தாமையும், உட்கு உடைத்தா - நாணந் தருவனவற்றை, வென்று - வெல்லுதலும், களையாமை - மேற்கொண்ட ஒழுக்கங்களை விட்டு விடாமையும், இவை ஆறும் - ஆகிய இவை ஆறு ஒழுக்கங்களும், பால்பட்டார் - துறவின் பாற்பட்டார், கொண்டு ஒழுகும் பண்பு - மேற்கொண்டு ஒழுகும் இயல்புகளாம்.

(ப-பொ-ரை.) உழவாற் பயிர் விளைக்காமையும், ஐம்பொறிகள் களிப்புற உண்ணாமையும், நீடாடாமையும், பிறர் சொன்ன கடுஞ் சொற்களுக்கு மிக உளையாமையும், உட்குடைய வருத்தங்களை வேறலும், மேற்கொண்ட சீலங்களை யரிதென்று