(இ-ள்.) பொன்னே - திருமகளை யொத்த பெண்ணே!, மின் நேர் - மின்னலுக்கு ஒப்பான, இடையார் - இடையையுடைய மகளிரின், சொல் தேறான் - மொழியை நம்பான், விழைவு ஓரான் - அவர்கள்பாற் கலவி விருப்பத்தைக் கருதான், கொன்னே - பயனில்லாமல், வெகுளான் - ஒருவரையுஞ் சினவான், கொலைபுரியான் - ஓருயிரையுங் கொலைசெய்யான், உறுப்பு அறுத்தால் அன்ன - தன் உடம்பின் உறுப்புக்களை அறுத்துக்கொடுத்தாற் போன்ற, கொடை உவப்பான் - ஈகையை விரும்பிச் செய்வான், தன்னின் - தனதுளத்தில், வெறுப்பு -பிறர்மேல் வெறுப்புக் கொள்ளுதலை, அறுத்தான் - நீக்கினானான ஒருவன், விண் அகத்தும் இல் - விண்ணுலகத்தின் கண்ணும் இல்லை. (ப-பொ-ரை.) பொன்னேயனையாய்! மின்போலு நேரிடையார் சொல்லைத் தேறாது, காமநுகர்ச்சியை நினையாது, பயனின்றியே மிக வெகுளாது, ஓருயிரைக் கொலைமேவாது, தன்னுறுப்பறுத்துக் கொடுப்பது போலுங் கொடையுவந்து, தன் மனத்திலுள்ள செருக்கையுறுமறுத்தான் விண்ணகத்து மிலன். (க-து.) மகளிரின் மழலையை நம்பாமை முதலியன உடையவன் தேவரினுஞ் சிறந்தா னென்க. மின் : தொழிலுவமம்; தெரிந்துந் தெரியாமலும் வளைந்து வளைந்து காண்டலுணர்த்திற்று. ‘உறுப்பறுத்தன்ன கொடை' - சிபிச்சோழன் செய்தமை போன்றது; அவன்றன் கொடைமையை. "புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக் குறைவி லுடம்பரிந்த கொற்றவன்" என்று சிலப்பதிகாரங் கூறும். உறுப்பு : சினையாகு பெயர். கொன் : இடைச்சொல். (20) 21. இளமை கழியும் பிணிமூப் பியையும் வளமை வலியிவை வாடும் - உளநாளால் பாடே புரியாது பால்போலுஞ் சொல்லினாய்! வீடே புரிதல் விதி. (இ-ள்.) பால்போலும் - பாலைப்போன்ற, சொல்லினாய் - மொழியினையுடைய பெண்ணே!, இளமை கழியும் - இளம் பருவம் நிலைபெறா தொழியும்; பிணி மூப்பு - நோயுங் கிழத்தன
|