பக்கம் எண் :

21

மும், இயையும் - வந்து சேரும், வளமை - செல்வமும், வலி - உடம்பின் வலிமையும், இவை வாடும் - ஆகிய இவை குன்றும், உள நாளால் - கழிந்தது போக எஞ்சியிருக்கும் வாழ்நாளில் பாடே புரியாது - துன்பந்தருஞ் செயல்களையே செய்துகொண்டிருக்க விரும்பாமல், வீடே புரிதல் - வீடுபேற்றிற்கான தவவொழுக்கங்களையே விரும்புதல், விதி - முறைமையாம்.

(ப-பொ-ரை.) பால்போலுஞ் சொல்லினாய்! இளமை நில்லாது கழியும், பிணியும் மூப்பும் வந்தடையும், செல்வமும் வலியும் வாடும், தானுள்ள நாளின்க ணிவ்வைந்தானும் வருந்துன்பத்தையே நுகரவிரும்பாது, வீடு பெறுதலையே விரும்புதலொருவர்க்கு நெறியாவது.

(க-து.) இளமை கழிந்து பிணி மூப்புகள் உண்டாதலின், மக்கள் வீடுபேற்றை விரும்பி நிற்றலே கடமையா மென்பது.

மூப்புக் காலத்திற் றோன்றும் பிணியே தீராது மிகுதலின், அதனை மூப்பொடுவைத் தெண்ணினார். நாளால், வேற்றுமை மயக்கம். பாடென்றது ஈண்டு வயிற்றுப்பிழைப் பொன்றையே கருதிச் செய்யும் முயற்சித் துன்பத்தைக் குறித்தது ஏகாரங்களிரண்டும் பிரிநிலை. இளமை, மூப்பு : பண்பாகு பெயர்.

(21)

22. வாளஞ்சான் வன்கண்மை யஞ்சான் வனப்பஞ்சான்
ஆளஞ்சா னாம்பொரு டானஞ்சான் - நாளெஞ்சாக்
காலன் வரவொழிதல் காணின்வீ டெய்திய
பாலினூ லெய்தப் படும்.

(இ-ள்.) வாள் அஞ்சான் - பகைவனது வாட்படைக்கு அஞ்சான், வன்கண்மை அஞ்சான் - கண்ணோட்டமின்மையை அஞ்சான், வனப்பு அஞ்சான் - ஆண்மைத் தோற்றத்தை அஞ்சான், ஆள் அஞ்சான் - ஆட்சியை அஞ்சான், ஆய் பொருள் அஞ்சான் - தெரிந்து தேடிய செல்வப் பொருளை அஞ்சான் - (ஆயினும்) நாள் எஞ்சா - நாள் குறையாத, காலன் - கூற்றுவனது, வரவு ஒழிதல் - வருகை நீங்குதலை, காணின் - ஒருவன் அடைய விரும்புவனாயின், வீடு எய்திய - வீடுபேற்றை அடையும்