பொருட்டு ஏற்பட்ட, பாலின் நூல் - அருட்டன்மை பொருந்திய அறிவு நூல் ஒழுக்கங்களை, எய்தப்படும் - அடைதல் வேண்டும். (ப-பொ-ரை.) வாள் வென்றியை யஞ்சான், தறுகண்மையை யஞ்சான், தோற்றப்பொலிவினை யஞ்சான், படையாளனென் றஞ்சான், செல்வமுடையனென் றஞ்சான், நாளினை மறந்தொழியாத காலன் தன்மேல்வரும் வரவினை யொழிதலொருவன் காண்பனாயின், வீட்டு நெறியைப் பொருந்திய தன்மையையுடைய நூல்களைச் சாரத்தகும். (க-து.) வீடுபே றடைவதற்கு நல்லொழுக்கங்களே யல்லாமல் அகவழிபாடு முதலியனவும் வேண்டப்படும். வாள் முதலியவற்றிற்கு அஞ்சுதல் ஓரச்சமன்று; மற்றுக்காலன் வரவுக்கு அஞ்சி முயறலே அஞ்சாமையாமென்பதுந் துணைக் கருத்தென்க. காலன் குறித்த நாள் தவறாது வருதலின், "நாளெஞ்சாக் கால'னெனப்பட்டான். இனி ‘எஞ்சா' வென்பதை ஈறுகெட்ட வினையெச்சமெனினும் ஆம். காலன் அறக்கடவுட்குத் தூதன். வீடு : காரணவாகு பெயர். ஆல் : உருபு மயக்கம். (22) 23. குணநோக்கான் கூழ்நோக்கான் கோலமு நோக்கான் மணநோக்கான் மங்கலமு நோக்கன் - கணநோக்கான் கால்காப்பு வேண்டான் பெரியார்நூல் காலற்கு வாய்காப்புக் கோடல் வனப்பு. (இ-ள்.) கால் காப்பு - காலுக்கு இடுந் தளை போன்ற தான இல்வாழ்க்கையை, வேண்டான் - விரும்பாத ஒருவன், குணம் நோக்கான் - நல்லியல்பினைப் பொருட்படுத்தாமல், கூழ் நோக்கான் - செல்வத்தை மதியாமல், கோலமு நோக்கான் - அழகையு மதியாமல், மணம் நோக்கான் - திருமணத்தை மதியாமல், மங்கலமும் நோக்கான் - புண்ணியத்தையு மதியாமல், கணம் நோக்கான் - சுற்றத்தாரை மதியாமல், காலற்கு வாய்காப்பு - காலனுக்கு வாயிற்காப்பாக, பெரியார் நூல் - சான்றோருடைய அறிவு நூல்களைக் கொள்ளுதல், வனப்பு - அழகாம். (ப-பொ-ரை.) குணமுடையானென்று பாரான், செல்வமுடையானென்று பாரான், தோற்றப் பொலிவுடையானென்று
|