பக்கம் எண் :

24

(க-து.) ஒவ்வொரு பிறப்பிலும் பிணி முதலான துன்பங்களுண்மையின், வீடுபேற்றிற்குரிய துறவொழுக்கத்தை மேற்கோடலே நன்மையாம்.

ஒடு : எண்ணுப்பொருள் பயக்கும் இடைச்சொல், பிறவற்றிற்குங் கூட்டுக. ஆடுநர், நகரவொற்று - பெயரிடை நிலை. ஒருவனே பல்வகைக் கோலங்கொண்டு நாடகமேடையில் நடித்தல்போல, ஓருயிரே வேறுவே றுடம்புடையதாய் உலகிற் பல் பிறப்பும் பிறந்து நிலவுதலின்; ‘அரங்கின்மே லாடுநர்போ' லென்றார். சாக்காடு : காடு விகுதிபெற்ற தொழிற்பெயர்.

(24)

25. பாடகஞ் சாராமை பாத்திலார் தாம்விழையும்
நாடகஞ் சாராமை நாடுங்கால் - நாடகம்
சேர்ந்தாற் பகைபழி தீச்சொல்லே சாக்காடே
தீர்ந்தாற்போற் றீரா வரும்.

(இ-ள்.) பாத்து இலார் - ஒருவர் வகையில் உரிமையில்லாத பொதுமகளிர், பாடு அகம் - பாடுகின்ற இடத்தில், சாராமை - அணுகாதொழிக; தாம் விழையும் நாடகம் - அவர்கள் விரும்பியாடுகின்ற நாடகத்தை, சாராமை - சேராதொழிக; நாடுங்கால் - ஆராயுங்கால், (பாடகம்) நாடகம் சேர்ந்தால் - அப்பாடுமிடத்தையும் நாடகத்தையும் அணுகினால், பகை பழி - பகையும் பழியும், தீச்சொல்லே - கடுஞ்சொல்லும், சாக்காடே - சாவும், தீர்ந்தால்போல் - இல்லாதனபோலிருந்து, தீரா வரும் - ஒழியாமல் வரும்.

(ப-பொ-ரை.) (ஓருறுதி படாதபோது) மகளிர் விரும்புகின்ற பாடுமிடஞ் சாராதொழிக. அவர்களோடு நாடகஞ் சேர்ந்து காணாதொழிக. அவர்களாடுமிடஞ் சார்ந்து காணுமாயிற்பகையும், பழியும், பிறர் சொல்லுந் தீச்சொல்லும், சாக்காடுமென்று சொல்லப்பட்ட நான்கு மவர்க்கு நீங்கினபோல நீங்காவாய் வரும்.

(க-து.) பொதுமகளிருடைய பாட்டையும் ஆட்டத்தையுங்கேட்டலுங் காண்டலும், பகையும் பழியுங் கடுஞ்சொல்லும் சாவும் விளைக்கும்.

சாராமை : வியங்கோட் பொருள்பட நின்றது; பாத்து - பாகம் ; பலர்க்கும் பொதுமையுடையரேயல்லாமல் ஒருவர்க்கே பிரிவினையுடைய ரல்லரென்பது கருத்து. ‘நாடுங்கால் நாடக'