மென்றவிடத்துப் ‘பாடக' மென்பதையுங் கூட்டியுரைக்க. ஏகாரம் : எண்; தீரா : வினையெச்ச விகுதி தொக்கது. (25) 26. மாண்டமைந்தா ராய்ந்த மதிவனப்பே வன்கண்மை ஆண்டமைந்த கல்வியே சொல்லாற்றல் - பூண்டமைந்த கால மறிதல் கருதுங்காற் றூதுவர்க்கு ஞால மறிந்த புகழ். (இ-ள்.) மாண்டு அமைந்து - ஒழுக்கத்தில் மாட்சிமைப்பட்டு, ஆராய்ந்த மதி - பல நூல்களை ஆராயப்பெற்ற அறிவும், வனப்பு - தோற்றப் பொலிவும், வன்கண்மை - பகைவர்க்கு அஞ்சாமையும், ஆண்டு அமைந்த - பயின்று நிரம்பிய, கல்வி - கல்வியறிவும், சொல் ஆற்றல் - மாற்றாரையும் வழிப்படுத்துஞ் சொல்வன்மையும், பூண்டு அமைந்த - தகுதி பொருந்திய, காலம் அறிதல் - காலமறிதலும், கருதுங்கால் - ஆராயுமிடத்து, தூதுவர்க்கு - தூதர்களுக்கு, ஞாலம் அறிந்த - உலகறிந்த, புகழ் - புகழை விளைப்பனவாம். (ப-பொ-ரை.) மாட்சிமைப் பட்டமைந்தாராய்ந்த மதியுடைமையும், தோற்றப் பொலிவுண்டாதலும், தறுகண்மையும், தன்னா லாளப்பட்டமைந்த கல்வியுடைமையும், சொல் வன்மையும், பொருந்தியமைந்த காலமறிதலுமென விவை யாராயுங்கால் தூதுவர்க் குலகறிந்த புகழாவது. (க-து.) அறிவு அழகு முதலியன தூதுவர்க்கு இயல்பாவனவாம். தூதர் இருவகையர் : தாம் வகுத்துச் சொல்வோர், பிறர் சொல்லியதைச் சொல்லுவோர். ஏகாரம் : எண். ஞாலம், உயர்ந்தார்மேனின்றது : இடவாகுபெயர். (26) 27. அஃகுநீ செய்ய லெனவறிந் தாராய்ந்தும் வெஃகல் வெகுடலே தீக்காட்சி - வெஃகுமான் கள்ளத்த வல்ல கருதி னிவைமூன்றும் உள்ளத்த வாக வுரை.
|