(இ-ள்.) வெஃகல் - பிறர் பொருள்கள் கவர விரும்புதலை, அஃகு - குறைக்க : வெகுடல் - சினத்தலை, நீ - விடுக, தீக்காட்சி - தீய காட்சிகளை, செய்யல்- காணற்க; எனவு - என்று அறிஞர் சொல்லுதலை, ஆராய்ந்து அறிந்தும் - எண்ணித் துணிந்தும், வெஃகுமான் - அவற்றை விரும்புவானாயின், இவை மூன்றும் - வெகுளல் முதலிய இம் மூன்று செயல்களும், கருதின - ஆராயுமிடத்து, கள்ளத்த அல்ல - கரவுடையனவல்ல, உள்ளத்த ஆக - உள்ளத்தினளவினவாக, உரை - நீ சொல்வாயாக. (ப-பொ-ரை.) வெஃகுதலையஃகு வெகுடலை நீக்கு, தீக்காட்சியைக் கருதிச் செய்ய லென்றறிந்தா னொருவன் சொல்லி, நீடுநின் மனத்தின் கருதற்றொழிலாக வேண்டின் நினையாக்கள்ளத்தனவல்ல. (க-து.) சினத்தல் முதலான செயல்களை ஒருவன் தீயவென்று அறிந்துஞ் செய்வனாயின், அவன் அவற்றை ஒரு செயல் முடிதற் பொருட்டுச் செய்கின்றானாதலால் நன்மையாம். உள்ளத்தில் அறிந்தே வைத்திருக்கின்றானென்றும், ஒரேதுவின் பொருட்டே செய்கின்றானென்றும், எனவே அவை தீயவல்லவென்றுங் கொள்க வென்பது. கள்ளத்த, உள்ளத்த: வினையாலணையும் பெயர்கள். ஆன் : ஆயினென்பதன் மரூஉவென்க. வெகுளலாகாது என்பது முதலான மூன்று கருத்துக்களும் உள்ளத்தினளவினவாக உள்ளனவென்று கொள்க. அஃகு, நீ செய்யல் : ஏவலொருமை வினை : இவை முறை நிரனிறைப் பொருள் கோளில் வந்தன. (27) 28. மையேர் தடங்கண் மயிலன்னாய் சாயலே மெய்யே யுணர்ந்தார் மிகவுரைப்பர் - பொய்யே குறளை கடுஞ்சொற் பயனிலசொ னான்கும் மறலையின் வாயினவா மற்று. (இ-ள்.) மை ஏர் - மை தீட்டிய அழகான, தடம் கண் - பெரிய கண்களையுடைய, மயில் அன்னாய் - மயிலைப்போன்ற பெண்ணே!, உணர்ந்தார் - சான்றோர், சாயலே - மென்மையான நற்சொற்களையும், மெய்யே - மெய்யையும், மிக உரைப்பர் - மிகவும்
|