பேசுவார், பொய்யே - பொய்யும், குறளை - புறங்கூறலும், கடுஞ்சொல் - வன்சொல்லும், பயனில சொல் - பயனில்லாத சொற்களும், நான்கும் - ஆகிய இவை நான்கும், மறலையின் வாயின - புல்லறிவுடையான் வாயில் வருவனவாம். (ப-பொ-ரை.) மையேர் தடங்கண் மயிலன்ன சாயலாய்! அறிவுடையார்தா மெய்யுரையே யுரைப்பார். பொய்யும், வடுச்சொல்லும், குறளையும், கடுஞ்சொல்லும், பயனில சொல்லுமென்று சொல்லப்பட்ட வைந்து மறலையின் வாயின்கண்ணே பிறக்கும். (க-து.) பெரியோர் வாய் நன்மொழிகளும், சிறியோர் வாய்த் தீச்சொற்களும் பிறக்கும். ஏகாரம், எண்; பிறாண்டும் இங்ஙனமே கொள்க. மற்று பிறிதென்பதன்மேல் வந்தது. மறல் - அறியாமை, பண்பாகு பெயராய்ப் பேதையரை யுணர்த்தியது. வாயின : இடமடியாகப் பிறந்த குறிப்பு வினைமுற்று. ‘சாயலாய்' என்று பாடங் கொள்ளுதலுமாம். (28) 29. நிலையளவி னின்ற நெடியவர்தா நேரா கொலைகளவு காமத்தீ வாழ்க்கை - அலையளவி மையெனநீள் கண்ணாய்! மறுதலைய விம்மூன்றும் மெய்யள வாக விதி. (இ-ள்.) அலை அளவி - அலைத்தலைப் பொருந்தி, மை என நீள் கண்ணாய் - கரிய நெடிய கண்களையுடைய பெண்ணே!, நிலை அளவின் நின்ற - தத்தம் நிலைக்கேற்ப ஒழுகாநின்ற, நெடியவர் தாம் - சான்றோர்க்கு, கொலை - ஓருயிரைக் கொல்லுதலும், களவு - திருடுதலும், காமம் தீ வாழ்க்கை - கொடிய காம வாழ்க்கையும், நேரா - உண்டாகா : மறுதலைய - இவற்றிற் கெதிராவனவாகிய கொல்லாமை, கள்ளாமை, காதல் வாழ்க்கையென்னும் இம்மூன்றும் - இந்த மூன்று செயலும், மெய் அளவு ஆக-உண்மை நிலைக்கு ஏற்றனவாக, விதி - அறிந்துகொள்க. (ப-பொ-ரை.) தங்கட்குச் சொன்ன நிலையளவின்கண்ணே நின்ற நெடியவர்க ளுடன்படாத கொலையும், களவும், காமத்தீ வாழ்க்கையுமென்னு மூன்றும், இவற்றுக்கு மறுதலையாகிய கொல்லாமையும், களவு காணாமையும், காம வாழ்க்கைப்
|