பக்கம் எண் :

28

பாடாமையுமென்னு மிம்மூன்று முடம்பின்றொழிலாக அலைத்தலை மேவி மையென நீண்ட கண்ணாய் விதிப்பாயாக.

(க-து.) கொல்லாமை முதலியனவே நிலைபிறழாத சான்றோரொழுக்கங்களாம்.

மெய்யளவாக விதி - உயிருள்ள உடலின் தொழிலாக விதிப்பாயாக எனலுமாம்.‘நெடியவர்பாற் கொலை முதலாயின நேரா; கொல்லாமை முதலாயினவே அவரொழுக்கங்களா' மென்று பொருள் கூறுக.நெடியவர்தாமென்றற்கு நான்கனுருபு விரித்துக்கொள்க.ஏழாவது விரிக்கவெனினும் பொருந்தும்.கண்கள் கடை நீண்டு கண்டாரை வருத்துதல் பற்றி, ‘அலையளவிமையென நீள்கண்' என்றார்.அலை : முதனிலைத் தொழிற்பெயர் ‘காமத் தீ வாழ்க்கையைத் தீய காமவாழ்க்கை யென்று கொள்க.அன்றிக் காமமென்னுந் தீயைப் பொருந்திய வாழ்க்கை யெனினுமாம்.இதற்கு மறுதலையான வாழ்க்கை ‘காதல் வாழ்க்கை' யென்பது.மறுதலைய என்பதில் மறுமை என்னும் பண்பு ஈறு கெட்டுத் தலைய என்னும் இடமடியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சத்தின் பகுதியாகிய தலையென்னும் பெயரோடு பண்புத்தொகையாக நின்றது.

(29)

30. மாண்டவர் மாண்ட வறிவினான் மக்களைப்
பூண்டவர்ப் போற்றிப் புரக்குங்கால் - பூண்ட
ஒளரதனே கேத்திரசன் கானீனன் கூடன்
கிரிதன்பௌநற்பவன் பேர்.

(இ-ள்.) மாண்டவர் - சான்றோர், மாண்ட அறிவினால் - தமது சிறந்த அறிவினால், மக்களை - தம் மக்களை, பூண்டு - காத்தல் மேற்கொண்டு, அவர்ப்போற்றி - அவர்களை விரும்பி,புரக்குங்கால் - வளர்க்குங்கால்.ஒளரதனே - ஒளரதனும், கேத்திரசன் - கேத்திரசனும், கானீனன் - கானீனனும், கூடன் - கூடோத்துபன்னனும், கிரிதன் - கிரிதனும், பௌநற்பவன் - பௌநற்பவனும் என்பன, பூண்டபேர் - அம்மக்கள் பெறும் பேராகும்.

(ப-பொ-ரை.) மாட்சிமைப்பட்ட வறிவுடையார், மாட்சிமைப்பட்ட தம் மறிவினாற் புதல்வரைப் பொருந்தியவகை யுரைக்குமிடத்து, தனக்குப் பிறந்தவ னுரதனென்றும், தன்னேவலாலாதல், தானிறந்ததற்பின்பு குருக்களாலாதல் தன் மனையாள் வயிற்றே பிறனொருவற்குப் பிறந்தவனைக் கேத்திரச