பக்கம் எண் :

29

னென்றும், தீவேட்டு மணம்புரியுமுன் தாய் வீட்டிற் பெற்ற பிள்ளையைக் கானீனனென்றும், மணம் புரிந்தபின் கணவன் வீட்டில் அவனுக்கொளித்துப் பிறனொருவனிடத்துப் பெற்ற பிள்ளையைக் கூடனென்றும், கணவனிறந்த பின்னர் வேறொருவனுக்குத் தான் மனையாளா யவனொடு பெற்ற பிள்ளைப் புநர்ப்பவனென்றும் கூறுப.

(க-து.) மக்கள் ஒளரதன் முதலாகப் பலவகைப்படுவர்.

ஒளரதன், கணவனுக்குப் பிறந்தவன்; கேத்திரசன், கணவனிருக்கையிற் பிறனுக்குப் பிறந்தவன்; கானீனன், திருமணமாகாதவட்குப் பிறந்தவன்; கூடோத்துபன்னன், களவிற்பிறந்தவன்; கிரீதன், விலைக்கு வாங்கப்பட்டவன்; பௌநற்பவன், கணவனிறந்தபின் அவன் மனைவி இரண்டாம் முறையாய்ப் பிறனை மணஞ் செய்துகொண்டு பெற்ற மகன்.மாண்டவர், அ : சாரியை.

(30)

31. மத்த மயிலன்ன சாயலாய் மன்னியசீர்த்
தத்தன் சகோடன் கிருத்திரமன் - புத்திரி
புத்ரனப வித்தனொடு பொய்யி லுபகிருதன்
இத்திறத்த வெஞ்சினார் பேர்.

(இ-ள்.) மத்தம் - களிப்புப் பொருந்திய, மயில் அன்ன சாயலாய் - மயிலையொத்த சாயலையுடைய பெண்ணே!, மன்னிய சீர் - நிலையான சிறப்பினையுடைய, தத்தன் - தத்தனும், சகோடன் - சகோடனும், கிருத்திரமன் - கிருத்திரமனும், புத்திரிபுத்திரன் - மகள் மகனும், அபவித்தனொடு - அபவித்தனென்பவனும், பொய் இல் - பொய்ம்மையில்லாத, உபகிருதன் - சுவயந்தத்தனும், இத்திறத்த - ஆக இவ்வகையன, எஞ்சினார்பேர் - மேற்கூறினாருள் ஏனையோர் பெயராம்.

(ப-பொ-ரை.) களிப்பு மிக்க மயிலையொத்த சாயலையுடையவளே! கூறாது மீந்தவர்களுடைய பெயர்களும் தத்தன், சகோடன், கிருத்திரமன், தௌத்திரன், அபவித்தன்,உபகிருதன் என்னும் இவ்வகையே யுள்ளனவாம்.

(க-து.) மக்கள் தத்தன் முதலாகப் பின்னும் பலவகைப் படுவர்.

தத்தன், பெற்றோரிருவராலாயினும் அன்றி அவருளொருவராலாயினும் மற்றொருவருக்கு விதிமுறையிற் கொடுக்கப்