பக்கம் எண் :

3

வர்கள். மந்திரி எண்பேராயம் முதலிய கூட்டங்களிலும் இருப்பவன். அறுநால்வர் : மிகுதிபற்றிவந்த திணை வழுவமைதி. நால்வர் - தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் என்பவருமாம். பேணி : தொழிலடியாகப் பிறந்த பெயர் இ: செயப்படு பொருண்மை விகுதி.

இறை - இறு, பகுதி ஐ : வினைமுதற் பொருண்மை விகுதி; யாவற்றிற்கும் மேலாய் நிற்பவன். திருமாலாகிய இறை யின் கூறுள்ளவன் அரசனாதலின் அரசனை ‘இறை' என்றார்.

நூல்

1. சென்ற புகழ்செல்வ மீக்கூற்றஞ் சேவகம்
நின்ற நிலைகல்வி வள்ளன்மை - என்றும்
வழிவந்தார் பூங்கோதா யாறு மறையின்
வழிவந்தார் கண்ணே வனப்பு.

(இ-ள்.) பூங்கோதாய் - பூக்களை யணிந்த கூந்தலையுடைய பெண்ணே!, சென்ற புகழ் - யாவரானும் ஒப்புக்கொள்ளப்பட்ட புகழும், செல்வம் - செல்வமும், மீக் கூற்றம் - பெருந்தகைமையாக மதிக்கப்படும் சொல்லும், சேவகம் நின்ற நிலை - நின்ற நிலையினின்றும் வழுவாத ஆண்மையும், கல்வி - கல்வியறிவும், வள்ளன்மை - ஈகைத் தன்மையும், ஆறும் - ஆகிய இவ்வாறு இயல்புகளும், வழி வந்தார் - உயர்குடியின் வழிப்பிறந்து, மறையின் வழி வந்தார் கண்ணே - திருநான்மறை வழியில் ஒழுகுபவரிடத்திலேயே, என்றும் வனப்பு - எந்நாளும் அழகாவனவாம்.

(ப-பொ-ரை.) நிறைந்த பூவையணிந்த கூந்தலையுடையாய்! திசையெங்கும் பரந்த புகழ், செல்வம், மேன்மையாகக் கொள்ளுஞ் சொல், வீரத்தில் அசையாது நின்ற நிலை, கல்வி, வரையாது கொடுத்தல் ஆகிய இவ்வாறும் தொன்மையுடைய குடிப்பிறந்து திருநான்மறை நெறியிலொழுகுவோரது இலக்கணம்,

(க-து.) புகழ் முதலிய ஆறும் நற்குடியிற் பிறந்து நான்மறையொழுக்கம் உடையாரிடத்திலேயே அழகு பெறும்.