பட்டவன்.இவனைச் ‘சுவீகார புத்திர' னென்ப.சகோடன், திருமணத்தின்போத கருவிருந்து பின் பிறந்தவன்; கிருத்திரமன், கண்டெடுத்து வளர்த்துக்கொள்ளப்பட்டவன்; புத்திரி புத்திரன், மகளுக்குப் பிறந்தவன் ; அபவித்தன், பெற்றோர்களாற் காப்பாற்ற முடியாமையால் விடப்பட்டுப் பிறனொருவனால் வளர்த்துக்கொள்ளப்பட்டவன்; உபகிருதன், காணிக்கைபோல வந்து சேர்ந்தவன்; இவனுக்குச் ‘சுவயந்தத்த' னென்பதும் பெயர். (31) 32. உரையான் குலன்குடிமை யூனம் பிறரை உரையான் பொருளொடுவாழ் வாயு - உரையானாய்ப் பூவாதி வண்டுதேர்ந் துண்குழலா யீத்துண்பான் தேவாதி தேவனாத் தேறு. (இ-ள்.) வண்டு - வண்டுகள், பூ ஆதி - மலர்கள் முதலியவற்றை, தேர்ந்து உண் - ஆராய்ந்து மொய்த்துண்ணுகின்ற, குழலாய் - கூந்தலையுடைய பெண்ணே!, குலன் - தன் குலத்தின் உயர்வையும், குடிமை - குடிப்பிறப்பின் உயர்வையும், உரையான் - பெருமை பாராட்டிச் சொல்லிக்கொள்ளாமல், பிறரை - அவ் விரண்டுவகையான உயர்வுமில்லாத மற்றவரை, ஊனம் உரையான் - குற்றஞ் சொல்லாமல், பொருளொடு வாழ்வு - தன் பொருளும் வாழ்வும், ஆயு - வாழ்நாளெல்லையும், உரையானாய் - வெளிப்படுத்தானாகி, ஈந்து உண்பான் - வறியார்க்குக் கொடுத்துத் தானும் உண்பவன், தேவ ஆதி தேவனா - தேவர்கள் தலைவனாக, தேறு - தெளிவாயாக. (ப-பொ-ரை.) மலர் முதலியவற்றை வண்டுகள் மொய்த்துண்கின்ற கூந்தலையுடையாளே! தன் குலத்தினுயர்வையும் குடிப்பிறப்பி னுயர்வையும் சொல்லாமல், அவ்விரண்டு மில்லாத மற்றவர்மேல் குற்றங் கூறாமல் தனது பொருளினளவோடு அனுபவிக்குஞ் செல்வத்தையும் ஆயுளையும் வெளிப்படுத்தானாகி, இரப்பவர்க்குக் கொடுத்துத் தானும் அனுபவிப்பவனைத் தேவர் களிற் சிறந்த தேவனாகத் தெளிவாய். (க-து.) தன்னுயர்வு கருதிப் பிறரை இழித்துரையாமலும் உடைமை விளம்பாமலும் ஒழுகி, வறியார்க்கு இட்டுண்பவன், தேவர் தலைவனாவான். குலனுங் குடிமையும் ஆகுபெயர். ஒடு : எண்;ஆயு - ஆயுள்; கடைக்குறை.பூவாதி, மலரும் மருவும் முதலாயின.உண்பா
|