பெயராய் ஒலி வடிவை யுணர்த்தியது.இனி இச்செய்யுளில் எழுத்தினால் நீங்காது என்பதற்குக் கல்வியறிவினளவே நீங்காது எண்ணால் ஒழியாது - தியான அளவிலே நீங்காது.ஏத்தி வழுத்தினால் மாறாது - துதிக்குந் தோத்திரத்தினாலும் நீங்காது என்று பொழிப்புரைக் கிணங்கப் பொருள் கூறுதலுமுண்டு. (38) 39. சாவ தெளிதரிது சான்றாண்மை நல்லது மேவ லெளிதரிது மெய்போற்றல் - ஆவதன்கண் சேற லெளிது நிலையரிது தெள்ளியராய் வேற லெளிதரிது சொல். (இ-ள்.) சாவது - உயிர்விடுதல், எளிது - எளிதாம், (ஆனால்) சான்றாண்மை - கல்வி கேள்விகளால் நிறைந்து ஒழுகுதல், அரிது - அரிதாகும், நல்லது - மனைவாழ்க்கையை, மேவல் - சார்தல், எளிது - எளிதாம் ; மெய்போற்றல் - ஆனால் அதன் கண் நின்று பற்றற்ற ஒழுக்கத்தைக் காத்தல், அரிது - அரிதாகும்; ஆவதன் கண் - துறவறத்தில், சேறல் எளிது - செல்லுதல் எளிதாம்; நிலைஅரிது - ஆனால் அதன்கண் நீள நிலைத்தல் அரிதாகும்; சொல் - எதனையும் சொல்லுதல், எளிது - எளிதாம்;தெள்ளியராய் - ஆனால் தெளிந்த அறிவுடையராய், வேறல் - அதனைச் செயலால் வெல்லுதல், அரிது - அரிதாகும். (ப-பொ-ரை.) இறத்தல் எளியது, அதற்கு முன் நல்லோன் எனப் பெயர்படைத்தல் அரியது, நல்ல பொருளை விரும்பி யதனை யடைதல் எளியது, வாய்மையைத் தனக்குக் காப்பாகக் கொண்டொழுகுவது அரியது, தனக்குத் துணையாவதாகிய பெருந்தவத்திற்குச் செல்வது எளியது, நிட்டை கைகூடும் வரை நிலைத்தல் அரியது, தெளிந்த ஞானியரான விடத்தும் ஐம்புலன்களையும் வென்று அவித்தலை எளிய காரியமாகச் செய்தல் அரியதாகுமெனச்சொல். (க-து.) கல்வி கேள்விகளால் நிறைந்தொழுகுதல் முதலாயின அருமையாகும். இல்லறம் துறவறம் இரண்டினும் நல்லது இல்லறமாகலின் அதனை ‘நல்ல' தென்னுஞ் சொல்லானும், முயற்சியினாற் றலைக் கூடுவது துறவறமாகலின் அதனை ஆவதென்னுஞ் சொல்லானும் உரைத்தார்; ஆவது வினைமுதல் வினையைக் கருவியின் மேலேற்
|