பக்கம் எண் :

38

றிக் கூறும் எதிர்கால வினையாலணையும் பெயர். சேறல் - செல் : பகுதி. தல் : புடைபெயர்ச்சி விகுதி. எளிது அரிது என அடி தொறும் வருவது முரண்தொடை.

(39)

40. உலையாமை யுற்றதற் கோடி யுயிரை
அலையாமை யையப் படாமை - நிலையாமை
தீர்க்கும்வாய் தேர்ந்து பசியுண்டு நீக்குவான்
நோக்கும்வாய் விண்ணி னுயர்வு.

(இ-ள்.) உற்றதற்கு - நேர்ந்த இடுக்கணைப் போக்குதற்கு, ஓடி - பல விடங்களிலும் விரைந்துபோய், உலையாமை - வருந்தாமலும், உயிரை - பிறவுயிர்களை, அலையாமை - வருத்தாமலும், ஐயப்படாமை - மறுமையை ஐயப்படாமலும், நிலையாமை தீர்க்கும் வாய் - பிறப் பிறப்புக்களை நீக்கவல்ல அருள் வழியை, தேர்ந்து - தெளிந்து, பசி அவாவையும், உண்டி - நுகர் பொருள்களையும், நீக்குவான் - நீக்குகின்றவன், நோக்கும் வாய் - செல்லும் இடம், விண்ணின் உயர்வு - விண்ணுலகத்துக்கு மேலிடமாகும்.

(ப-பொ-ரை.) தனக்குற்ற துன்பத்துக் கோடித் தளராது, பிறருயிரை வருந்த அலையாது, மறுமையை ஐயப்படாது, நிலையாத பிறப்பைத் தீர்க்கும் வா யாராய்ந்து, பசியினையு முண்டியினையு நீக்கித் தவஞ் செய்வா னுறைதற்கே யாராயுமிடம் விண்ணினுச்சி.

(க-து.) உலையாமை முதலியன உடையான் விண்ணுலக நிலைக்கும் மேல் நிலையை அடையான்.

உலைதலும் அலைதலும் வருந்துதலாகும்; பசியும் உண்டியும் இடத்திற்கேற்பப் பொருள் செய்யப்பட்டன. விண்ணின் உயர்வு - மகேசுரமண்டில முதலாயின வென்க. விண்ணின் உயர்வு : நான்காம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, காரணப் பெயர். நிலையாமை : எதிர்மறைத் தொழிற்பெயர். நிலையாமையையுடைய பிறப்பை நிலையாமை என்பது மரபு வழுவமைதி. உலையாமை அலையாமை ஐயப்படாமை : எதிர்மறை வினை யெச்சங்கள்.

(40)